நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

எது சரி..? எது தவறு..? - மணிபூரகம்

3/12/09

இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுனாயகமாய் விளங்கும் அனாகதம் உனர்வு மையம் என பார்த்தோம். நம் உடல் அமைப்பு என்பது வலது இடதாக சமச்சீராக அமைந்துள்ளது. வலதில் ஒரு கை,ஒருகால், செவி, கண் இதைப்போன்றே இடதிலும் ஒரு கை,ஒரு கால்,செவி, கண். உடலின் ஒட்டுமொத்த இடது பாகத்தையும் வலது மூளையும், ஒட்டுமொத்த வலதுபாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்துகிறது.
ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய கண்,காது,செவி, வாய்,மூக்கு ஆகியவை நமது கட்டுப்பட்டில் இயங்கும் வண்ணம் புறத்தே அமைந்துள்ளது. இந்த புலன்கள் அனுபவங்களைத் தரக்கூடியவை என்பதால் வெளி உலகை பார்க்கும் வண்ணம் இயற்கை அமைத்துள்ளது. அதே சமயம் நம் உடல் இயங்க தேவையான உறுப்புகள் ஒவ்வொன்றும் உடலின் உட்புறமாய் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் அதை இயக்க முடியாது.தானியங்கிகளாக அவை இயங்குகின்றன.
ஞானிகள் நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதாக கூறுவார்கள். இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் +வாய்+ ஜல + மல துவாரம் என மொத்தம் ஒன்பது. இதில் கழிவு வெளியேற்றத்திற்கு உதவும் கடைசி இரண்டை தவிர்த்து மற்றவை அனைத்துமே உள்நுழைவு வாயில்கள் ஆகும்.கண்களின் வழியாக..காட்சியையும், செவிகளின் வழியாக ஓசைகளையும்,நாசியின் வழியாக நறுமணத்தையும்,உள்வாங்குகிறோம். வாய் வழியாக நாம் உயிர் வாழத்தேவையான உணவினை உட்க்கொள்கிறோம்
உணவானது வாய்வழியே சென்று நமக்கு சக்தியை தருவது குழந்தைகளுக்கும் தெரியும் சாதாரண விடயம். ஆனால்..கண்வழி நாம் பார்க்கும் காட்சிகளும் , செவி வழி கேட்கும் ஒலியும்.நாசிவழி நுகரும் மணமும் நமக்கு சக்தி தருவதை நாம் உணர்வதில்லை.உடலுக்குள் செல்லும் உணவு செய்யும் அத்தனை பணியையும் இந்த புலன்வழி நாம் கொள்ளும் அனுபவங்கள் நமக்குள் செய்கின்றன.
நீங்கள் விரும்பாத காட்சி ஒன்றை தொண்டைக்குழி ஏற்காது- அதனால்தான் " அவர் சொன்னதை என்னால் விழுங்கவே முடியல" என்கிறோம். விழுங்கி தொலைத்த ஒருவர் "என்னால அதை ஏற்க முடியல "என்கிறார். ஒரு விஷயத்தை ஏற்கவேண்டியது அனாகதம் என்கிற இதயத்தின் பணி. ஏற்றுக்கொண்ட ஒருவர் சொல்கிறார்" அதை என்னால் செரிக்க முடியல.."
வாய் வழியாக நாம் உட்கொள்ளும் உணவு நேரடியாக நமக்கு சக்தியாக சேராது.இட்லி,தோசை, பொங்கல், பூரி என வகை வகையாக நாம் உள்ளே தள்ளிய அனைத்தையும் இரைப்பை கார்போஹைரேட்டகவும்.புரதமாகவும்,உப்பாகவும்,சர்க்கரையாகவும்,இதர வைட்டமின்களாக மட்டுமே பார்க்கும். தன்னிடத்தில் வந்த அரைத்த உணவுக் கலவையை சாதக பாதகங்களோடு இனம் பிரிக்கும் வேலையை செய்யும். அதன் பின்னரே செரிமாணப்பணி.
இந்த பணி-உள்ளூர் தபால் நிலையத்தில் போட்ட ஒரு கடிதத்தை ஊர்வாரியாக பிரிப்பார்களே(sortout)அந்த பணிக்கு ஒத்தது.நம் வாழ்வில் நாம் சந்தித்த ஒரு நிகழ்வின் சாதக பாதகத்தை ஆய்ந்து - பிரிக்கும் மகத்தான பணியைத்தான் "மணிபூரக மையம்" செய்கிறது. இந்த மையத்தின் அதிமுக்கிய செயலதிகாரிகளாய் முன் நிற்பவர்கள் நமது சிறுனீரகங்கள் ஆகும்.
ஒவ்வாமையான உணவு வயிற்றில் இறங்கினால் -செரிமானத்தை,கழிவுவெளியேற்றத்தை பாதித்து உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி ஊரு விளைவிக்குமோ அதை போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வாமையான விஷயங்கள் உடலை பாதிக்கும். அதனால்தான் உடல்னலம் கெட்டால் மனனலமும் சேர்ந்தே கெடுகிறது. உடலும் மனமும் ஒன்றி பிணைந்த அம்சங்களாகும். இதமான உணவினால் நம் ஆரோக்கியத்தை பேணுகிற மாதிரி, இதமான உணர்வுகளால் இந்த மையத்தை நாம் அணுக வேண்டும்.
கருத்தியல்களில் நாம் முரண்பட முரண்பட..இந்த மையத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். உணர்வில்லாமல் உள்ளே தள்ளிய உணவை ஓரளவுக்கு பிரிக்க முயன்று, இறுதியில் பிரிக்க முடியாமல் கொழுப்பு கட்டிகளாக உடலில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அப்பிவிடும். நாம் கண்டபடி திணிக்கும் கருத்துக்களுக்கும் இதே கதைதான்.பகவான் புத்தர்தான் இந்த ஆய்வை கண்டறிந்தார். பகுக்க முடியாத நிலையில் ஆசைகளும், கனவுகளும், இந்த மையத்தால் ஓரங்கட்டப்பட்டு உடலில் அதிர்வுகளாக, கண்ணுக்கு புலனாகாத முடிச்சுகளாக இறுகுகின்றன என கண்டறிந்தார்.
கார் வாங்கவேண்டும் என தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவனுக்கு என்ன நிகழும்..? அந்த எண்ணம் நிறைவேறாத நிலையில் உள்ளே அதிர்வாக தங்கும். நாளொருமேனி பொழுதொரு வண்ணம் சாலையில் ஓடும் வண்ண வண்ன கார்களை பார்க்கும்போதெல்லாம் ஏங்கும். காரில் செல்பவர்களைப் பார்த்து பொறாமைப்படும். நாம் வாழவேண்டிய வாழ்க்கயை இன்னொருவர் வாழ்வதாய் பார்க்கும். "நம்மால் வாங்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி வாங்கினான்" என ஆராய்ச்சி செய்யும்.
மூச்சை ஒழுங்குபடுத்தி உடலுக்குள் நிறைவேறாத ஆசைகளாய் குடிகொண்டிருக்கும்- இந்த முடிச்சுகளை அகற்றும் தியான முறைதான் புத்தர் கண்ட 'விபாசனா'தியான முறை.
சிறுநீரகம் கெட்டுப்போனால் டயாலிசீஸ் செய்வதைப்போல- நம் மனம் திரிபு நிலைக்கு வரும்போதெல்லாம் உடனுக்குடனே நம் மனதையும் நாம் டயாலிசீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிபூரக மையம் நம்மை செவ்வனே வைத்திருக்கும்..இல்லையெனில்..அறைகுறையாய் தன் பணியை முடித்து - ஃபைலை அடுத்த மையத்திற்கு தள்ளிவிடும்..அடுத்த மையம் என்ன செய்யும்....?தொடர்வோம்.....

என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!தமிழ்'அழகி'யுடன்வெங்கட்.தாயுமானவன்
என் தமிழோடு கைகுலுக்க(www.kvthaayumaanavan.blogspot.com)

0 Comments: