நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

திருநீலகண்டர்தான் எல்லோரும்..!

3/12/09

இறை மையமான சகஸ்ராரம்-தொடர்ந்து நம் சுயம் துலங்கும் ஆக்ஞாவாகியநெற்றிப்பொட்டு - இப்போது நாம் இறங்கி வந்திருக்கும் இடம் விசுக்தி.பாம்பினைக்கொண்டு பார்கடைக்கடைந்து கிடைத்த அமிர்தத்தை தேவர்கள்பருக,துணைப்பொருளாய் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். அந்தவிஷம் உள்ளிறங்காமல் சக்தி தன் கைகளால் சிவனின் தொண்டையில் அழுத்தவிஷத்தின் விஷத்தன்மைமுறிந்தது. அன்றிலிருந்து சிவன் திருனீலகண்டர்ஆனதாய் கதை ஒன்று உண்டு. கதையாக கேட்கும் வரைதான் இது கதை.
நம் உடலில் விசுக்தி என்று சொல்லப்படும் இந்த மையம் வெகுசிறப்புதன்மைகளைக்கொண்டது.நம் தொண்டை இங்குதான் உள்ளது.உந்தி கமலத்துகாற்றை மேலுழுப்பி நாவை மேலன்னத்திலும்,கீழன்னத்திலும் தொட்டசைத்துமொழியாய் பேச அடுத்தவருக்கு கேட்கிறதே -அந்த ஓசையை எழுப்பும்-குரல்வளையும் இங்குதான் உள்ளது. நாக்கில் வைக்கப்பட்ட உணவானது சுவைஅரும்புகளால் உணரப்பட்டு, பற்களால் அரைப்பட்டு விழுங்கியதும் உணவு பைக்குபோகிறது அல்லவா..?அந்த் கிடங்கிற்கு உணவை எடுத்து செல்லும் உணவு குழாயும்இந்த விசுக்தி மையத்தில்தான் உள்ளது. நாசியின் வழியாக சுவாசிக்கிறோமே,அந்த மூச்சுக்குழாயும் இந்த மையத்தில்தான் உள்ளது.ஆக விசுக்தியின்சங்கமத்தில் குரவளை,உணவுகுழாய்,மூச்சுகுழாய் என மூன்றும் அணிவகுத்துநிற்கிறது.
இந்த மையம் அடைப்பட்டால்- உணவு உள் போகாது-பேசமுடியாது- சுவாசிக்கமுடியாது.வெளியே இருந்து வரும் உணவை உள்ளே அனுப்பவும், உள்ளேயிருந்துஎச்சிலையோ ,சளியையோ வெளியே எடுக்கவுமென இந்த மையம் செய்யும் ஒவ்வொருபணியும் விசித்திரமானவை. உணவும்,சுவாசமும்,பேசும் சொல்லும் இந்த மையத்தைகடக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் "கண்டம் கடத்தல்" என்றொருபிரயோகத்தை கையாண்டார்கள். கண்டம் என்றால் ஆபத்து என ஒருபொருள்கொண்டிருக்கிறோம். சாதாரண ஆபத்தல்ல. உயிருக்கு விளையும் ஆபத்தைகண்டம் என சொல்லி வருகிறோம். சிலர் எனக்கு தண்ணியில் கண்டம். எனக்குபயணத்துல கண்டம் என சொல்வதுண்டு.
உண்மையில் அதுவல்ல பொருள்- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவர்தம்குடும்பத்தினர் வரிசையாய் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றுகையில் அதுகண்டத்தை கடக்கவேண்டும்.அப்படி கடக்காமல் அது திரும்பிவிடுமானால் அவர்இறப்பை அடைகிறார். எத்தனை பேர் வாழ்வில் இதை பார்த்தாயிற்று.
சிவபெருமானுக்கு இருக்கும் அதே கண்டம்தான் நமக்கும் இருக்கிறது. இதில்ஒரு சந்தேகமும் வேண்டாம். சிவனுக்காவது விஷத்தை முறிக்க சக்திதேவப்பட்டாள். நமக்கு அதுவும் தேவை இல்லை.அனைத்தையும் நம் தொண்டையேபார்த்துக்கொள்கிறது. ஆம் நம் ஒவ்வொருவரின் தொண்டையும் விஷத்தைமுறிக்கும் வல்லமையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. நாம் உண்ணும் அன்றாடஉணவில் அமிர்த மயத்தோடே, விஷமும் இருக்கிறது. அதை தினமும் இந்ததொண்டைதான் முறித்துக்கொண்டிருக்கிறது. நாமும் திருனீல் கண்டர்கள்தான்.
இந்த மையம் மிக நடுனிலையானது. நீதி நேர்மை தவறாதது. விழுங்கும் கவளஉணவில், முடியோ,கல்லோ,அல்லது ஒவ்வாத ஒன்றை - கிரிக்கெட் விளையாட்டை,சீரியல பார்த்தபடியே விழிப்பின்றி நாம் விழுங்கிவிடலாம். ஆனால் அய்யா'தொண்டைமான் 'அவ்வளவு எளிதில் அதை உள்ளே விட்டுவிட மாட்டார். அந்தநொடிப்பொழுதில் ஆய்ந்துணர்வார், ஒவ்வாத ஏதேனும் இருக்குமெனில் அது உள்ளேபோகாமல், உணர்த்தப்பட்டு "பாவி கல்லை விழுங்க பார்த்தியே"என்றுமென்மையாய் கடிந்து அதை வெளியே துப்பும், குமட்டுகிற மாதிரி பாவிக்கும்.தொலைக்காட்சியில் ஆழ்ந்த நாம் சுயத்துக்கு வந்து, கருத்தாய் அந்த்துணுக்கை எடுத்துப்போட்டுவிட்டு, மீண்டும் தொலைகாட்சியில் ஆள்வோம்.
தவிர்க்கமுடியாமல் பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலை வரும்போது இந்தமைய்த்துக்குரிய நம் 'தொண்டைமான்' அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.காரணம் எண்ணம் ஏதும் அற்ற சகஸ்ராரத்திலிருந்து வாழ்வின் நிமித்தம் நாம்நெற்றியிலிருந்து சிந்தித்த ஏதோ ஒரு எண்ணத்தை, மூலாதாரத்திலிருந்துபெற்ப்பட்ட சக்தியின் உதவியோடு வாய்வழியாய் பேசுவது இந்தவிசுக்தியினால்தான். இயல்பாகவே நம் உடல் தூய்மையின் இருப்பிடமாய்திகழ்கிறது. இதை பெரும்பாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் தன்முதலாளிக்காக பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலையில், அதை செய்துவிட்டு,அதற்கான சுய பரிகாரமாய், தொண்டை எச்சில்கூட்டி விழுங்கி தன் பொய்மையைவிழுங்கும். இதயம் ஒரு கணம் அதிரும்..'ஆ..நம்மாளு பொய் சொல்லிட்டாரா.."வயிற்றில் ஒரு பந்து உருளும். இப்படி எல்லா மையங்களுமே ஒருஅதிர்வுக்குள்ளாக, மனம் அதை ஞாயப்படுத்தும். பிறகே உடலில் சகஜ நிலைவரும். நம் உடலும்,மனமும்,உயிரும் சாதாரணமான விஷயங்கள் அல்ல என்பதை நாம்புரிந்துகொள்ளவேண்டும்.
எண்ணமாக இருக்கும் வரை அது வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை.பேசிவிட்டாலோ..அதற்கு பின் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்குஎஜமானர்களாகிவிடுவார்கள். பேசிய பேச்சுக்கு நாம் பொறுப்பேற்கவேண்டியகட்டாயம் உண்டாகிவிடும். அதனால்தான் விசுக்தி மையத்தை நாம் நடுனிலைமையம்,நீதி மையம். உடலின் சோதனி சாவடி என்றெல்லாம் அழைக்கிறோம்.
நம் முன்னோர்கள் தோளில் துண்டு அணிவதை பார்த்திருக்கிறீர்களா..? ஆமாபெரியமனுஷனாட்டம் கழுத்துல ஒரு துண்டு என கேலி பேசுவதைகேட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த துண்டு அணிதல் என்பது ஒவ்வொருமனிதரிடமும் இருக்கும் நடுனிலை தன்மையை வெளிப்படுத்தும் ஒருஅடையாளமாகும். பெரியவர்கள் அந்த துண்டை வலது பக்கத்திற்கும், இடதுபக்கத்திற்கும் சமமாக இருக்குமாறு அணிவார்கள். இதன் அர்த்தம் நான் எந்தபககமும் சாய மாட்டேன். உண்மையின் பக்கமே இருப்பேன் என்பதன்வெளிப்பாடே.இப்போது நம் அரசியல்வாதிகள் மட்டும்தான் துண்டு அணிகிறார்கள்.கழுத்தில் சமனிலையாய் சுற்றாமல், ஒரே பக்கமாக அரையும் குறையுமாகதொங்கும். அப்புறம் அவர்களிடம் நாம் எப்படி நடுனிலை தன்மையைஎதிர்பார்க்கமுடியும்..?
நம் விசுக்தியில் உணவிலிருக்கும் விஷம் மட்டுமல்ல- கருத்து பொருள் மூலம்நுழைய பார்க்கும் விஷமும் முறியவேண்டும். நடுனிலை உணரப்படவேண்டும்.நாம் எண்ணிய எண்ணம் இறைனிலையிலிருந்து, அதன் சத்தியத்தின் பொருள் உணர்ந்தநிலையிலைருந்து எண்ணப்பட்டிருந்தால்.,நாம் பேசும் வார்த்தைகளால்யாருக்கும் எந்த தீங்கும் நேரப்போவதில்லை. மாறாக ஏதோ பேசினோம் எனபேசினால், கேட்பவர்கள் எதிர்வினை காட்டுவார்கள். அதைஎதிர்கொள்ளவேண்டியிருக்கும். நம் விழிப்பற்ற தன்மையால் ஏற்படும் முதல்விபத்து இங்கிருந்துதான் துவங்குகிறது. வாழ்கை போராட்டமாவதுபேசுவதிலிருந்துதான். இதற்கு பிறகு நாம் அறிவு நிலையிலிருந்து விலகி,நடுனிலையிலிருந்து விலகி, அடுத்த உணர்வு மையமான அனாகத்திற்கு வந்துஅனுபவிக்கும் வேதனைகள்....அடுத்ததில் தொடருவோம்.....
--என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!தமிழ்'அழகி'யுடன்வெங்கட்.தாயுமானவன்
செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamiltransliterator.(அழகிய தமிழ்மகள்)
என் தமிழோடு கைகுலுக்க(www.kvthaayumaanavan.blogspot.com)

0 Comments: