நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

உச்சந்தலையில் ஒரு வரைபடம்

3/12/09

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை கட்டுரையின் தொடர்ச்சியாய் இனிவரும் ஏழு கட்டுரைகளும் மலர்கிறது.உயிர்வாழ்வின் ஆதாரமையங்களாய் செயல்படும் இந்த ஏழு யோகசக்கரங்களை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.
இந்த முயறசியை- சகஸ்ராரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான இறங்கு பாதையிலும் அல்லது மூலாதாரம் தொடங்கி சகஸ்ராரம் வரையிலான ஏறுப்பாதையிலும் செய்யமுடியும். நான் இங்கு இறங்கு பாதையையே தெறிவு செய்கிறேன் அதற்கான காரணத்தை பின்னர் விளக்குவேன்.
சகஸ்ராரம்- சக்தி மையத்தின் உச்சிபுள்ளி. அதனால்தான் அதற்கு இடம் உச்சந்தலையில். அடிப்படையில் எனக்கொரு பார்வை உண்டு. இவ்வுலகில் மனிதத்திற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மதங்களும், மனித சக்திகளை ஏதோ ஒரு வகையில் துண்டாடும் எந்த ஒரு அம்சத்திற்குமே இரண்டாம் அல்லது மூன்றாம் இடமே. ஞானிகள் கண்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மனிதனுக்கானவையே தவிர மதங்களுக்கானவை அல்ல. அடுத்து, மதம் என்பது நம் தனி இருப்பை காட்டிக்கொள்ள விசாரத்தின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட அறிவின் முதலாளித்தனம் எனவும், விருப்புக்குட்பட்டு காரணமின்றியோ காரணத்தோடோ..சார்பு நிலையில் பிறக்கும் நேசம் எனவும் பார்க்கிறேன். மனித சக்திகளை ஒன்றிணைக்காத மதம் எனக்கு தேவை இல்லை.
பல்வேறு காரணங்களால் வேறுபட்டு திரியும் மனிதத்தை ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைப்பதற்கான சான்றுகளை நிறுவுவதே என் பிறப்பின் பணியாய் தெரிகிறது. நான் இவ்வுலகை மூன்று அடிப்படைகளில் பார்க்கிறேன்.1.உடல்+உயிர்+மனம் = மனிதன்2.உடல்+உயிர்-மனம் = விலங்குகள், மரம் செடி கொடிகள்,புழு பூச்சியினங்கள்.(வரையரைக்குள்ளான மனம் கொண்டவை)3.உடல்-உயிர்-மனம் = ஜடப்பொடருட்கள்.
மேற்சொன்ன மூன்று வாழ்வு குழுமங்களும்- அவை வாழ்வதற்குரிய ஏதுவை ஏற்படுத்தி தரும் பஞ்சபூத்ங்கள் தவிர்த்து வேறொன்றை இவ்வுலகில் புதிதாய் கொண்டுவர இயலுமா என்பது சாத்தியமற்றது. இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால், செல் போன் பயன்படுத்துகிறோம்.அதை instrument என்கிறோம், அதாவது உடல். அது பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால் அதன் மின்கலம்(battery) மின்னூட்டம் தரப்பட்டிருக்க வேண்டும். அந்த பேட்டரிதான் உயிர்,உடல் உயிர் இருந்து விட்டால் போதாது. நமக்கான தனி பதிவை தரும் 'சிம்கார்ட்' என்பது நம் மனம்.இந்த மூன்றும் இருந்துவிட்டால் செல்போனை பயன்படுத்த முடியுமா..? சேட்டிலைட் சிக்னல் வேண்டும்- அது இறைவ்னின் அருள். அருள் மட்டும் போதாது- நம் பதிவுக்கான நல்வினை இருப்பு என்கிற ரொக்க இருப்பு(balance)இருந்தால் மட்டுமே செல்போன் பயன்பாடு சாத்தியம்.
இதில் எந்த ஒன்றில் குறை ஏற்படினும், செல்போன் ஜடப்பொருள் ஆகிவிடும். மனித வாழ்வும் இத்தகையதே. நாம் ஜடத்தன்மை ஏகிவிடக்கூடாது என்பது என் அவா. உலகில் பிறந்து வளர்ந்து, அறிவில் நிமிர்ந்து,மொழியாலும்,இனத்தாலும்,நிறத்தாலும்,கலாச்சாரத்தாலும், இன்னும் என்னென்ன பிரிவினைகளுக்குள் பிரிந்திருக்கும் மனிதர்களை இந்த உடல்+உயிர்+மனம் = மனிதன் என்கிற ஒருங்குறிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.
சகஸ்ராரம் இந்தியாவில் பிறந்த இந்துக்களுக்கு மட்டுமா..? உலகில் உள்ள அத்தனை மனிதர்களூக்குமா எனும் கேள்வியை எழுப்புகையில் நம் ஆதி தமிழ் ஞானிகளின் தீர்க்கங்கள் அத்துனையும் உலகப்பொதுமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.
சகஸ்ராரத்தை இந்திய துணைக்கண்டத்தின் உச்சியில் இருக்கும் இமயத்தின் உச்சியில் இருக்கும் கயிலாய மலையாய் நமக்கு காட்டி வைத்தது - நம் சக்தியை உச்சிக்கு உயர்த்தவேண்டும் என்கிற குறியீடு என்பதாகவே நான் கருதுகிறேன்.
சரி சகஸ்ராரத்திற்கு வருவோம். எண் சாண் உடலுக்கு பிரதானமான சிரசில், தலையின் உச்சியில் இதற்கான இடம்.குறிப்பாக எந்த இடம்..?தலை உச்சியில் கேசம் சுழித்துக்கொண்டு நிற்கிறதே அந்த இடம். ஒரு வரைபட தாளில் நான்கு அச்சுக்கோடுகளைப் போட்டால்., அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி உருவாகும் அல்லவா..? அப்படி ஒரு வரைகோட்டு புள்ளி நம் உச்சந்தலையில் இருக்கிறது. நாம் அதை பேசு வழக்கில் 'உச்சிக்குழி'என்று சொல்லி வருகிறோம். பிறந்த குழந்தைக்கு அது துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதன் துடிப்பு நின்று போய்விடும்.இதன் சூட்சுமம் என்ன..? கருவில் இருக்கும் குழந்தை நிபந்தனைக்கு உட்பட்ட கால உச்சவரம்பில் 300 நாட்கள் தாயின் வயிற்றில் இருக்கும். குழந்தைக்காக அம்மா சாப்பிடுவாள், குழந்தைக்கு தேவையான அத்தனையும் அம்மாவிடமிருந்து தரப்படும். இது சார்பு வாழ்கை. கால நிர்ணயத்திற்கு பிறகு, இயற்கையின் உந்துதலோடு குழந்தை மண்ணுக்கு வந்ததும்,சார்பு வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வுக்கு தயாராகிறது.
சார்பின் முடிவும்- சுதந்திரத்தின் துவக்கமும் நடந்தேறுவது எப்போது தெரியுமா..? தொப்புள்கொடி வெட்டப்படுகிறதல்லவா..?அப்போதுதான். வெட்டப்பட்ட தொப்புள் துளையின் வழியேதான் ஜீவன் என்கிற உயிர்காற்று முதன்முதலாய் உடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்றியில் வைக்கப்படுவதாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்." உச்சிக்கு கீழே உள் நாக்குக்குமேலேவச்ச பொருளின் வகை அறிவாரில்லை.." என பாடப்பட்டது அந்த் ஜீவன் குறித்துதான். அந்த முதல் காற்று உள்னுழைந்த அதிர்வில் குழந்தை காட்டும் எதிர்வினைதான் அழுகை. அப்படி குழந்தை அழாவிட்டால், சுற்றி இருக்கும் நாம் அனைவரும் அழவேண்டியிருக்கும்.இந்த ஜீவனை நீங்கள் 'சிம் கார்ட்' என வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது 'ஹார்ட் டிஸ்க்' என வைத்துக்கொண்டாலும் சரி. பயன்பாட்டிற்காக இனி அவற்றை programme செய்யவேண்டும். எவ்வகையான மென்பொருளையும் பயன்படுத்த operating system install செய்யப்பட வேண்டும். அந்த OS தான் நம் மனமாகும். அந்த மனதை வடிவமைக்க இயற்கை செயல்படும் பாதையே நம் தலை உச்சியின் உச்சிகுழி. programme download ஆனதும், வாழ்வை எதிர்கொள்ள மனம் வடிவமைக்கப்பட்டதும் உச்சிகுழி 'சீல்' ஆகிவிடும்.
அந்த இறை துலங்கும் மேடையைத்தான் நாம் சகஸ்ராரம் எனும் பெயரில் அழைத்து வருகிறோம். மேலே எரிந்த பொருள் கீழே விழும் என்பது ஈர்ப்பு விதி. இது இங்கு நம் சக்திக்கும் பொருந்தும். மேலே இருந்து நமக்கு வரும் உயிராற்றல் எனும் சக்தி வெகு இயல்பாய் கீழே அடுத்த மையங்களுக்கு ஈர்க்கப்படுவது விதி. கீழே விட்டுவிடாமல் தூக்கிப்பிடித்து மேலேயே வைத்திருப்பது முயற்சி.விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான்.சகஸ்ரார தளம் என்பது இறைதளம். அவ்விடத்தில் மனதை கட்டிப்போட்டு வைத்தால் நாமும் இறைத்த்ன்மையை பெறுகிறோம். கடவுள் உருவங்களில் அவர்களின் தலைக்கு பின்னால் தெரியும் ஒளிவட்டம் குறிப்பிடுவது சகஸ்ரார புள்ளியின் ஆளுமையையே ஆகும்.நாமும் அங்கிருந்தால் நமக்கும் ஒளிவட்டம் வாய்த்துவிடும்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த மையத்திற்கு நாம் அனைவருமே அதீத மரியாதை தந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு வியப்பாக இருக்கும்..,தலையில் இருக்கும் உச்சிகுடுமி, பூச்சூடுதல்,தலையில் அணியும் தொப்பி,பெண்கள் இட்டுக்கொள்ளும் முக்காடு,கோவிலில் நாம் பெறும் சடாரியின் ஆசீர்வாதம், துளசி தீர்த்தத்தை உசியில் தடவிக்கொள்ளும் பழக்கம்..இதெல்லாமே வழி வழயாக மனிதர்கள் இந்த புள்ளியின் செயல்பாட்டை புனிதப்படுத்த செய்யும் வழக்கங்கள் ஆகும்.
இன்னும் சொலப்போனால் நம் மனமே சுருள்வில் அலையாக உடலுக்குள்ளும் அல்லாமல்,வெளியேயும் அல்லாமல் இங்குதான் துலங்குகிறது. அது வாங்கியாக (receiver) செயல்படுகிறது. கோவில் கர்ப்பகிரக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசம் போன்றது அந்த இடம்.
நம் மனம் துலங்கும் சகஸ்ரார மையத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். ஒருவேளை சூடாக இருக்கலாம். கணினி சூடாகிவிட்டால் hang ஆகிவிடுமல்லவா..?அதைபோல நம் உச்சி தலையின் ரிசீவர் சூடாகிவிடாமல் இருக்கவே..அம்மாவும் பாட்டியும் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள். நம்மை யாராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போகிறோம்.
சகஸ்ராரம் என்பது எண்ணங்களற்ற அமைதி பெருவெளியில் நம்மை இருக்க வைப்பது. இறையின் இயற்கை பெருநிலையில் நம்மை லயப்படுத்திக்கொள்வது. அப்படி செய்யத் தவறினால் மனம் ஒரு மையம் கீழிறங்கி 'ஆக்ஞாவுக்கு' வந்துவிடும். நம் வாழ்கை துவங்கிவிடும். போராட்ட களத்தில் நாம் குதிப்பது அடுத்த மையத்தில். அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

0 Comments: