நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

வாழ்க்கை!

3/12/09

வாழ்க்கை!ஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும்!.
பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்!இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டும் நீள் நெடும் நிழலாய்!பயம் கண்டு ஓடுபவர்க்கோ பின் தொடரும் நிழலாய்!உப்பரிகையில் நின்று காண்பவர்க்கோஅனைத்தும் சிறு பொம்மையாய்!அண்ணாந்து ஏங்கி பார்ப்பவர்க்கோஅனைத்துமே தோன்றும் பிரம்மாண்டமாய்!நடந்து செல்பவர்க்கோ தன்னுடன்நடை பயிலும் நல்ல நட்பாய்!புறக்கண் கொண்டு பார்ப்பவர்க்குபுரியாத புதிராய்த் தென்படும்!அகக்கண் கொண்டு பார்ப்பவரேஅறியக்கூடும் அந்த ரகசியம்!யதோ திருஷ்டி ததோ மனயதோ மன ததோ பாவயதோ பாவ ததோ வாழ்க்கை.பாகம்பிரியாள்.

பிச்சை பாத்திரம்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியில் வல்வினை சூழ்ந்ததா இன்மையை நான் அறியாததா இன்மையை நான் அறியாததா சிறு தொன்மையில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய் புது வினையா பல வினையா கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அதை நின்று மனம் இங்கு பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

நினைவாற்றலின் அறிவியல்

மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர் இடம் உண்டு.இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலானவீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்றஉரையாடல்களை கேட்கமுடியும்.
நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்கதொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லிஅழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.
தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தைநினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காகஅவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்குசகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பைகாலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து திரும்பமாட்டிக்கொள்ள உதவுகிறான்.
கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்குசென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்துதந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.
நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடுசம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசையவேண்டிய அவசியமும் இருக்கிறது.நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்தகருவியும் கிடையாது.செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.
உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.
ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலைநீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரணFM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.
இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சிலவிஷயங்கள்தான்.இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்இல்லை. உணர வேண்டும்.நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.
1.கவனித்தல்.(Listening)ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அதுஅதன் அடுத்த படினிலைக்கு போகிறது.
2.பதிவு(Recording)நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறதுதெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொருவிந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு80%எனில் பதிவு 40%தான்.அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவுசெய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்தண்டனையா எனவும் தெரியவில்லை.
3.இருப்பு வைத்தல்(Retaining)கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாகபொதிந்து வைக்கிறது.பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்புவைப்பது எதற்காக..?
4.திரும்ப கேட்டல்(Recalling)ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,100 சதவீதம் எனில்இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.
நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடைபுலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதேநேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்இயல்பே.இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.
ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காகபடிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.
இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெயர் சொல்லிகை குலுக்குகிறார்.விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.
பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படிஇருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று."நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.
கவனியுங்கள்....கவனியுங்கள்.....கவனியுங்கள்...!
--தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

அடக்குவோம்-அடங்குவோம்

இறைவா..,என்னையொரு பானையாய் வனைந்து பொன் பொருள் என நீ இட்டு நிரப்பியும் போதாமல் இன்னும் உன்னிடம் குறையிரந்துகொண்டே இருக்கிறேன் நான்.
கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டிநாலாறு மாதமாய் குயவனை வேண்டிகொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதைகூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'
இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.அவர் அடங்க தவறிட்டாராம்.
அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமைஆரிருள் உய்த்துவிடும்.
அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.
தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனையமன்னுயிர் எல்லாம் தொழும்.
தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும்.
இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.
நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.
கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நான்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"
அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை

தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.
நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.
சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
பயணபாதை விவரம்.1.சகஸ்ராரம்2.ஆக்ஞா3.விசுக்தி4.அனாகதம்5.மணிபூரகம்6.சுவாதிஷ்டானம்7.மூலாதாரம்.
யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.
இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.
1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.
மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?
அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.
இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்
இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல""என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல" "என்னால செரிக்க முடியல"
நான் நானா இல்லன்னா -பைத்தியம்நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்விழுங்க முடியலன்னா- வாந்தி.ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.
பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

காதல் ஓவியம்

" காதல் ஓவியம்"

அதன் சுட்டி இதோ:
http://youthful.vikatan.com/youth/sureshpoem270209.asp

உச்சந்தலையில் ஒரு வரைபடம்

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை கட்டுரையின் தொடர்ச்சியாய் இனிவரும் ஏழு கட்டுரைகளும் மலர்கிறது.உயிர்வாழ்வின் ஆதாரமையங்களாய் செயல்படும் இந்த ஏழு யோகசக்கரங்களை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.
இந்த முயறசியை- சகஸ்ராரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான இறங்கு பாதையிலும் அல்லது மூலாதாரம் தொடங்கி சகஸ்ராரம் வரையிலான ஏறுப்பாதையிலும் செய்யமுடியும். நான் இங்கு இறங்கு பாதையையே தெறிவு செய்கிறேன் அதற்கான காரணத்தை பின்னர் விளக்குவேன்.
சகஸ்ராரம்- சக்தி மையத்தின் உச்சிபுள்ளி. அதனால்தான் அதற்கு இடம் உச்சந்தலையில். அடிப்படையில் எனக்கொரு பார்வை உண்டு. இவ்வுலகில் மனிதத்திற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மதங்களும், மனித சக்திகளை ஏதோ ஒரு வகையில் துண்டாடும் எந்த ஒரு அம்சத்திற்குமே இரண்டாம் அல்லது மூன்றாம் இடமே. ஞானிகள் கண்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மனிதனுக்கானவையே தவிர மதங்களுக்கானவை அல்ல. அடுத்து, மதம் என்பது நம் தனி இருப்பை காட்டிக்கொள்ள விசாரத்தின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட அறிவின் முதலாளித்தனம் எனவும், விருப்புக்குட்பட்டு காரணமின்றியோ காரணத்தோடோ..சார்பு நிலையில் பிறக்கும் நேசம் எனவும் பார்க்கிறேன். மனித சக்திகளை ஒன்றிணைக்காத மதம் எனக்கு தேவை இல்லை.
பல்வேறு காரணங்களால் வேறுபட்டு திரியும் மனிதத்தை ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைப்பதற்கான சான்றுகளை நிறுவுவதே என் பிறப்பின் பணியாய் தெரிகிறது. நான் இவ்வுலகை மூன்று அடிப்படைகளில் பார்க்கிறேன்.1.உடல்+உயிர்+மனம் = மனிதன்2.உடல்+உயிர்-மனம் = விலங்குகள், மரம் செடி கொடிகள்,புழு பூச்சியினங்கள்.(வரையரைக்குள்ளான மனம் கொண்டவை)3.உடல்-உயிர்-மனம் = ஜடப்பொடருட்கள்.
மேற்சொன்ன மூன்று வாழ்வு குழுமங்களும்- அவை வாழ்வதற்குரிய ஏதுவை ஏற்படுத்தி தரும் பஞ்சபூத்ங்கள் தவிர்த்து வேறொன்றை இவ்வுலகில் புதிதாய் கொண்டுவர இயலுமா என்பது சாத்தியமற்றது. இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால், செல் போன் பயன்படுத்துகிறோம்.அதை instrument என்கிறோம், அதாவது உடல். அது பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால் அதன் மின்கலம்(battery) மின்னூட்டம் தரப்பட்டிருக்க வேண்டும். அந்த பேட்டரிதான் உயிர்,உடல் உயிர் இருந்து விட்டால் போதாது. நமக்கான தனி பதிவை தரும் 'சிம்கார்ட்' என்பது நம் மனம்.இந்த மூன்றும் இருந்துவிட்டால் செல்போனை பயன்படுத்த முடியுமா..? சேட்டிலைட் சிக்னல் வேண்டும்- அது இறைவ்னின் அருள். அருள் மட்டும் போதாது- நம் பதிவுக்கான நல்வினை இருப்பு என்கிற ரொக்க இருப்பு(balance)இருந்தால் மட்டுமே செல்போன் பயன்பாடு சாத்தியம்.
இதில் எந்த ஒன்றில் குறை ஏற்படினும், செல்போன் ஜடப்பொருள் ஆகிவிடும். மனித வாழ்வும் இத்தகையதே. நாம் ஜடத்தன்மை ஏகிவிடக்கூடாது என்பது என் அவா. உலகில் பிறந்து வளர்ந்து, அறிவில் நிமிர்ந்து,மொழியாலும்,இனத்தாலும்,நிறத்தாலும்,கலாச்சாரத்தாலும், இன்னும் என்னென்ன பிரிவினைகளுக்குள் பிரிந்திருக்கும் மனிதர்களை இந்த உடல்+உயிர்+மனம் = மனிதன் என்கிற ஒருங்குறிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.
சகஸ்ராரம் இந்தியாவில் பிறந்த இந்துக்களுக்கு மட்டுமா..? உலகில் உள்ள அத்தனை மனிதர்களூக்குமா எனும் கேள்வியை எழுப்புகையில் நம் ஆதி தமிழ் ஞானிகளின் தீர்க்கங்கள் அத்துனையும் உலகப்பொதுமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.
சகஸ்ராரத்தை இந்திய துணைக்கண்டத்தின் உச்சியில் இருக்கும் இமயத்தின் உச்சியில் இருக்கும் கயிலாய மலையாய் நமக்கு காட்டி வைத்தது - நம் சக்தியை உச்சிக்கு உயர்த்தவேண்டும் என்கிற குறியீடு என்பதாகவே நான் கருதுகிறேன்.
சரி சகஸ்ராரத்திற்கு வருவோம். எண் சாண் உடலுக்கு பிரதானமான சிரசில், தலையின் உச்சியில் இதற்கான இடம்.குறிப்பாக எந்த இடம்..?தலை உச்சியில் கேசம் சுழித்துக்கொண்டு நிற்கிறதே அந்த இடம். ஒரு வரைபட தாளில் நான்கு அச்சுக்கோடுகளைப் போட்டால்., அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி உருவாகும் அல்லவா..? அப்படி ஒரு வரைகோட்டு புள்ளி நம் உச்சந்தலையில் இருக்கிறது. நாம் அதை பேசு வழக்கில் 'உச்சிக்குழி'என்று சொல்லி வருகிறோம். பிறந்த குழந்தைக்கு அது துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதன் துடிப்பு நின்று போய்விடும்.இதன் சூட்சுமம் என்ன..? கருவில் இருக்கும் குழந்தை நிபந்தனைக்கு உட்பட்ட கால உச்சவரம்பில் 300 நாட்கள் தாயின் வயிற்றில் இருக்கும். குழந்தைக்காக அம்மா சாப்பிடுவாள், குழந்தைக்கு தேவையான அத்தனையும் அம்மாவிடமிருந்து தரப்படும். இது சார்பு வாழ்கை. கால நிர்ணயத்திற்கு பிறகு, இயற்கையின் உந்துதலோடு குழந்தை மண்ணுக்கு வந்ததும்,சார்பு வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வுக்கு தயாராகிறது.
சார்பின் முடிவும்- சுதந்திரத்தின் துவக்கமும் நடந்தேறுவது எப்போது தெரியுமா..? தொப்புள்கொடி வெட்டப்படுகிறதல்லவா..?அப்போதுதான். வெட்டப்பட்ட தொப்புள் துளையின் வழியேதான் ஜீவன் என்கிற உயிர்காற்று முதன்முதலாய் உடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்றியில் வைக்கப்படுவதாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்." உச்சிக்கு கீழே உள் நாக்குக்குமேலேவச்ச பொருளின் வகை அறிவாரில்லை.." என பாடப்பட்டது அந்த் ஜீவன் குறித்துதான். அந்த முதல் காற்று உள்னுழைந்த அதிர்வில் குழந்தை காட்டும் எதிர்வினைதான் அழுகை. அப்படி குழந்தை அழாவிட்டால், சுற்றி இருக்கும் நாம் அனைவரும் அழவேண்டியிருக்கும்.இந்த ஜீவனை நீங்கள் 'சிம் கார்ட்' என வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது 'ஹார்ட் டிஸ்க்' என வைத்துக்கொண்டாலும் சரி. பயன்பாட்டிற்காக இனி அவற்றை programme செய்யவேண்டும். எவ்வகையான மென்பொருளையும் பயன்படுத்த operating system install செய்யப்பட வேண்டும். அந்த OS தான் நம் மனமாகும். அந்த மனதை வடிவமைக்க இயற்கை செயல்படும் பாதையே நம் தலை உச்சியின் உச்சிகுழி. programme download ஆனதும், வாழ்வை எதிர்கொள்ள மனம் வடிவமைக்கப்பட்டதும் உச்சிகுழி 'சீல்' ஆகிவிடும்.
அந்த இறை துலங்கும் மேடையைத்தான் நாம் சகஸ்ராரம் எனும் பெயரில் அழைத்து வருகிறோம். மேலே எரிந்த பொருள் கீழே விழும் என்பது ஈர்ப்பு விதி. இது இங்கு நம் சக்திக்கும் பொருந்தும். மேலே இருந்து நமக்கு வரும் உயிராற்றல் எனும் சக்தி வெகு இயல்பாய் கீழே அடுத்த மையங்களுக்கு ஈர்க்கப்படுவது விதி. கீழே விட்டுவிடாமல் தூக்கிப்பிடித்து மேலேயே வைத்திருப்பது முயற்சி.விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான்.சகஸ்ரார தளம் என்பது இறைதளம். அவ்விடத்தில் மனதை கட்டிப்போட்டு வைத்தால் நாமும் இறைத்த்ன்மையை பெறுகிறோம். கடவுள் உருவங்களில் அவர்களின் தலைக்கு பின்னால் தெரியும் ஒளிவட்டம் குறிப்பிடுவது சகஸ்ரார புள்ளியின் ஆளுமையையே ஆகும்.நாமும் அங்கிருந்தால் நமக்கும் ஒளிவட்டம் வாய்த்துவிடும்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த மையத்திற்கு நாம் அனைவருமே அதீத மரியாதை தந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு வியப்பாக இருக்கும்..,தலையில் இருக்கும் உச்சிகுடுமி, பூச்சூடுதல்,தலையில் அணியும் தொப்பி,பெண்கள் இட்டுக்கொள்ளும் முக்காடு,கோவிலில் நாம் பெறும் சடாரியின் ஆசீர்வாதம், துளசி தீர்த்தத்தை உசியில் தடவிக்கொள்ளும் பழக்கம்..இதெல்லாமே வழி வழயாக மனிதர்கள் இந்த புள்ளியின் செயல்பாட்டை புனிதப்படுத்த செய்யும் வழக்கங்கள் ஆகும்.
இன்னும் சொலப்போனால் நம் மனமே சுருள்வில் அலையாக உடலுக்குள்ளும் அல்லாமல்,வெளியேயும் அல்லாமல் இங்குதான் துலங்குகிறது. அது வாங்கியாக (receiver) செயல்படுகிறது. கோவில் கர்ப்பகிரக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசம் போன்றது அந்த இடம்.
நம் மனம் துலங்கும் சகஸ்ரார மையத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். ஒருவேளை சூடாக இருக்கலாம். கணினி சூடாகிவிட்டால் hang ஆகிவிடுமல்லவா..?அதைபோல நம் உச்சி தலையின் ரிசீவர் சூடாகிவிடாமல் இருக்கவே..அம்மாவும் பாட்டியும் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள். நம்மை யாராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போகிறோம்.
சகஸ்ராரம் என்பது எண்ணங்களற்ற அமைதி பெருவெளியில் நம்மை இருக்க வைப்பது. இறையின் இயற்கை பெருநிலையில் நம்மை லயப்படுத்திக்கொள்வது. அப்படி செய்யத் தவறினால் மனம் ஒரு மையம் கீழிறங்கி 'ஆக்ஞாவுக்கு' வந்துவிடும். நம் வாழ்கை துவங்கிவிடும். போராட்ட களத்தில் நாம் குதிப்பது அடுத்த மையத்தில். அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

உடலுக்குள் ஒரு நெஞ்சாலை

http://kvthaayumaanavan.blogspot.com/2009/02/blog-post_1857.html
இந்த கட்டுரையை படங்களுடன் வாசிக்க மேற்கண்ட இணைப்பை சொடுக்கவும்
தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.
நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.
சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
பயணபாதை விவரம்.1.சகஸ்ராரம்2.ஆக்ஞா3.விசுக்தி4.அனாகதம்5.மணிபூரகம்6.சுவாதிஷ்டானம்7.மூலாதாரம்.
யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.
இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.
1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.
மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?
அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.
இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்
இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல""என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல" "என்னால செரிக்க முடியல"
நான் நானா இல்லன்னா -பைத்தியம்நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்விழுங்க முடியலன்னா- வாந்தி.ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.
பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.


தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை - பின்னதிர்வு-2

நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே > இருக்கிறது// > > //அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை > செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை > ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது// > > அன்புத் தாயுமானவன், > > எனக்கும் சில கேள்விகள். > ஒவ்வொருவருக்கும் ஆற்றல் கிடைக்கும் அளவு வேறுபடுமா? > > 1. இது எண்ணங்களோடு தொடர்பு உடையதா? > 2. நம்க்கு வேண்டுமளவுக்கு பெற முடியுமா? > 3. அதிகம் பெற்றால் தீமையா? > 4. நியூட்டனின் மூன்றாம் விதி உடன்படுமா? > 5. இந்த ஆற்றலின் திறனை நமக்குள் அதிகப்படுத்த முடியுமா? > > அற்புதமான பதிவு. > அதிசயமாய் எனக்கும் கேள்வி கேட்க நேரம்.. > > நன்றி.
முதற்கண் நன்றி தவா., ஆற்றல் கிடைக்கும் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான அள்வில்தான் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்துவதிலதான் கோளாறு.இயற்கை நமக்கு தந்திருக்கும் நதிகள் அதிகம். அதை பராமரித்து பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்சினை அல்லவா..? இன்னொருவகையில் சொல்வதானால்-அன்றாடம் நாம் பயன்படுத்தும் மின்சாதன்ப்பொருட்கள் வடிவத்திலும்,தன்மையிலும்,செயல்பாட்டிலும் வேறு வேறானவை.(சுழலும் மின்விசிறி,கொதிக்கும் heater, குளிரும் a/c )ஆனால் குளிர்வதற்கானாலும் சரி. கொதிப்பதற்கானாலும் சரி.நாம் உள்ளீடாக தரும் பொருள் ஒன்றேதான். மின்சாரம். அளவும் ஓரே அளவுதான்.(230 வோல்ட்ஸ்). மின் சலவைபெட்டியோ. தொலைகாட்சி பெட்டியோ அதற்கு தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் நாம் என்ன டிசைன் என தீர்மானிக்காதவரை ஆற்றலின் அளவு பற்றி யோசிக்கமுடியாது. திடமாய் இருக்கும் ஒரு வசதியான வீட்டு பையனால்-ஒரு சைக்கிளைக்கூட தள்ள முடியாது.ஆனால்..பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு கூலிக்கார சிறுவன் அனாயசமாய் ஒரு அரிசி மூட்டையை தூக்கிவிடுவதை பார்க்கிறோம். இந்த ஆற்றல் வளர்ச்சி புறம் சார்ந்தது.புற ஆற்றலை தேவைகள் வளர்க்கவோ,குறைக்கவோ செய்யும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது அக ஆற்றல் பற்றி. மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு இருக்கிறது.கோபம்,tension,விரக்தி,ஏமாற்றம்,பதற்றம்..போன்ற சமயங்களில் சுவாசத்தின் வேகமும்,இதய துடிப்பும் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம் அல்லவா..?அதே ஒரு பெருமூச்சு விடும் சமயத்தில் கிடைக்கும் relax ஐயும் நினைத்து பாருங்கள். மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நம் அக ஆற்றலை வளர்த்துக்கொள்ளமுடியும். அதற்கான பயிற்சிமுறைகளான யோகா,தியானம், ஆகியவற்றை மதங்களோடும்,கடவுளோடும் தொடர்பு படுத்தியதே அதன் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணம் ஒரு சாதாரண செடி தனக்கு தேவையான் உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. எங்கே வைத்தாலும் சூரியனை நோக்கி செல்லும் தேவையும்,புரிதலும் அவைக்கு உண்டு. இதுதான் ஒவ்வொரு உயிர் குழுமத்திற்கும் இயற்கை செய்து வைத்திருக்கும் network system. வண்ணத்துபூச்சி கோடி ரூபாய் தந்தாலும் மலம் உண்ணாது. பன்றிக்கு 100 கோடி ருபாய் தந்தாலும் தேன் பருகாது. இது அவற்றின் network. இவ்வளவு ஏன் 1000 ரூ.கொடுத்து ஒரு செல்போன் வாங்கி, 100 ரூக்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிம் கார்ட் நம்மை ஒரு network உடன் இணைக்கும்போது..காந்த மயமான மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் network பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள். மற்ற உயிரினம் போல நமக்கு network வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை.நாம் நம்மை tune செய்ய..செய்ய..நம் ஆற்றலின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதில் ஐயமே வேண்டாம் எல்லொரையும் போன்றவர்தான் ப்ரூஸ்லீ, ஆனால் அவருடைய கைகள் மட்டும் எப்படி ஓரெ அடியில் கல்லையும், மரத்தையும் பிளந்தன..? காரணம் பயிற்சி. அவரைப்போல பயிற்சி செய்த எல்லோருமே இன்று கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களும் பயிற்சி செய்தால் உடைக்க முடியும்.பயிற்சி செய்தால் யாராக இருந்தாலும் ஆற்றல் வரும்..சந்தேகமே வேண்டாம். அடுத்து -ஆற்றலை அதிகமாக்கிகொள்வது தீமையா ..? அது உங்கள் ஆற்றலை எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்போகிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. ஓடுகளத்தில் 120 மைல் வேகத்தில் காரை செலுத்தினால் வெற்றி. பொது சாலையில் ஓட்டினால் தண்டனை. இது நிஜம்தானே..?. நியூட்டனின் விதி நிச்சயமாய் பொருந்தும். பெரிய உதாரணமெல்லாம் தேவை இல்லை. கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்ளும் நம் சாமிகளை உற்று பாருங்கள். அந்த 48 நாட்களுக்கு அனுஷ்டிக்கும் விரதமென்ன, கோபவார்த்தைகள் கிடையாது, மது,மாமிசம்,மாது கிடையாது. வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தெய்வாம்சமாய் பாவித்து காலில் விழும் தன்மை என்ன,,,?48 நாட்களுக்கு பிறகு இந்த உணர்வுகள் என்னாகிறது. மாலயை கழற்றியதும்- பட்டை லவங்க மசாலா- டாஸ்மாக்..இதுதானே. நினைத்தால் அந்த தவ தன்மையை ஆயுளுக்கும் தொடர முடியாதா..? முடியும்..?மனம் தேவை இல்லை என நினைக்கிறது. அதனால் தலை உச்சியில் கவனமாய் உட்கார்ந்துகொண்டு..விழிப்பாய் இருந்த் மனம்.., தன் நிலையில் இருந்து இறங்கிவிடுகிறது. "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.."என பாடுவதற்கும், "நிலாகாயுது நேரம் நல்ல நேரம்.."என பாடுவதற்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறதா..? நிச்சயமாக நம் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தவா.நம் மனம் ஒரு opaerating system என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதுவும் சாதாரண os கிடையாது. MS நிறுவனம் ஒவ்வொரு மொழிக்கும் தனிதனியே OS தயாரிக்க வேண்டும். நம் மனித OS அப்படியானதல்ல. ஒரு வயதாகும்போது உங்களுக்கு மொழி தெரியாது. ஆனால் இன்று குறைந்தது இரண்டு மொழி உங்களால் பேச முடியும். இன்னும் நினைத்து பயிற்சி எடுத்தால், உலக மொழிகள் அனைத்தையும் கற்று சாதனை செய்யப்போகிறேன் என தீர்மானித்தால் அத்தனை மொழிகளையும் கற்க உங்களுக்கு தடை எதுவுமே இல்லை. நம் OS ஐ வேலை வாகுவதில் இருக்கிறது நம் ஆற்றல். சுவாமி.விவேகானந்தர் சொன்னதுபோல "எல்லா ஆற்றலும் நமக்குள்.."என்பதை நம்புவதால் எந்த கேடும் இல்லை. என்னையும் சிந்திக்கும் வண்ணம் வினாக்கள் தொடுத்த உங்களுக்கு நன்றி தவா. தொடர்ந்து இயலுமானால் கட்டுரைகளை வாசியுங்கள்.கூட்டு பகிர்வாய் தீர்த்துக்கொள்வோம் நம் ஐயங்களை. > --தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை - பின்னதிர்வு பகிரல்-1

கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான் தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில் கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்குஉந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான். இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது. மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து என்று சொல்லலாமா???
அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும் கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான் கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில் கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
அன்புடன்
சுவாதி.
உலகியல் ரீதியில் எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்தை நிறுவ சாத்தியமே இல்லை.காரணம் நாம் வாழும் வாழ்கை என்பது சார்பியலை சார்ந்தது என்ற உண்மையை நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம். அமெரிக்காவில் நீங்கள் இந்த மடலை அடித்தபோது அங்கு சூரியன் இருந்திருக்ககூடும். அதே நேரம் இங்கு காலனேரத்தின் நிலை வேறு.
ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றிபோட்டாலே பொருள் மட்டுமல்ல..யாவுமே மாறிபோகும். உதாரணத்திற்கு- what is the time..? என்ற கேள்விக்கும் what the time is..? என்ற கேள்விக்கும் உள்ள முரணை பார்த்தால் விளங்கும்.
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சர்ர்பு நிலையாகும். நம்பாமல்போனதற்கு நீங்கள் 100 காரணம் சொன்னால். நம்புவதற்கு ஒருவர் 1000 காரணங்களை சொல்லக்கூடும்.
இறையை -உருவமாக, கொள்கையாக பாராமல், ஒரு தன்மையாகவும்,இயற்கை ஒழுக்கமாகவும் பார்க்க புரிந்துகொண்டால் பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். துன்பம் நேரும்போது காப்பாற்றவேண்டிய பொறுப்பெல்லாம் கடவுள் தன்மைக்கு கிடையாது.
ஒரு குண்டூசி தேவை என்றால் வானத்தை பார்த்து கர்த்தரிடமோ, ஈசனிடமோ, அல்லாவிடமோ "குண்டூசியை தாருங்கள் என கேட்பதில் " ஞாயமே இல்லை. உருவான காலத்திலிருந்து நிலத்தடியில் தங்கிய இரும்புதாது பற்றிய அறிவு நம்மிடம் உண்டு. பிரித்தெடுத்து உருக்கி, ஊச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்- இயற்கை ஒழுக்கம் நமக்கு அறிவை மட்டும்தான் தரும். அதைவைத்து நாம் பெறநினைப்பதை அடைந்துகொள்ள வேண்டியதுதான்.நம் நாட்டில் இரும்பு தாது தீர்ந்துபோனால் அயல்னாட்டிலிருந்து தருவிக்க வேண்டியதுதான். அங்கும் தீர்ந்துவிட்டதா..இரும்புக்கான மாற்றுபொருளை யோசிக்க வேண்டியதுதான். மாற்றுப்பொருளும் உருவாக்க முடியவில்லையா..?இந்த உலக இயக்கம் நின்றுவிடாது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. பிள்ளையார் சிலை பால் குடித்ததென்று , அந்த சிலையை உடைத்த ஒரு தீவிரவாதிதான் இன்று இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆன்மீகம் என்பது பாட்டு பாடுதல் மத சின்னங்களை அணிதல், என்ற விதிக்கப்பட்ட கட்டுக்குள் நின்று போனது பரிதாபம்.
நேற்று உங்களின் profile பார்த்தேன். புற்றுநோய் உள்ளவர்க்கு உதவுதலை நோக்க்மாக சொல்லி இருந்தீர்கள். உங்களால் உதவி பெற்ற ஒருவர், பூரண குணம் பெற்று "நீங்கள்தான் என் கடவுள் "என்று சொன்னால் என்ன செய்வீர்கள்..? என்ன சொல்வீர்கள்..? நாம் இப்படித்தான் பழக்கப்பட்டுவிட்டோம். செய்தால் சாமி உண்டு- செய்யலையா சாமி இல்ல - இரண்டு கருத்தியலுமே தவறு.
அப்புறம் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்கொண்டு வந்தபோது -உங்கள் வார்த்தை ஒன்று கண்ணில் பட்டது- "நாம் பதியனிட்ட ரோஜா..நம் கண் முன்னாலேயே மலருதலை பார்த்தல்..அதை ரசித்தல் "என ஒரு அழகியலோடு சொல்லப்பட்ட அதை உள்ளே சென்று படிக்ககூட தோணவில்லை.நாம் பார்க்க அந்த செடி எத்தனை மலர்களை மலர்த்தி மகிழ்ச்சிப்படுத்துகூடும்..? சீசன் மாறினால் மலர்தல் நின்றுவிடாதா..? இதுதான் இயற்கையின் ஒழுக்கம். இங்கொரு பூ மலர்வதை நிறுத்தினால்தான்,வேறொரு இடத்தில் வேறொரு பூவை மலர்த்த முடியும்.
இந்தியாவில் வெயில்- US ல் நிலா. USல் வெயில் இந்தியாவில் நிலா
வகுப்புக்கு வந்த வாத்தியார் கேட்டார்.."டேய் பசங்களா..பூமி நம்ம சூரியனை எப்படிடா..சுத்துது..?" பையன் ஒருத்தன் சொன்னான் , "ஒழுங்கற்ற பாதையில் சுத்தி வருது சார்.." அப்படின்னு. "வெரி குட். ஒக்காருடா" அப்படின்னாரு வாத்தியார். நம்ம பள்ளிகூட பாடதிட்டம் இதைத்தான் சொல்லுது. பையன் இதை எழுதினா மதிப்பெண் நிச்சயம் உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா..? "பூமி சூரியனை ஒழுங்கற்ற பாதையில்..ஒழுங்காக சுற்றி வருகிறது.." ஆம் சுத்தி வர்றதென்னவோ ஒழுங்கில்லா பாதைதான்..,ஆனா சுத்துகிற முறையில் ஒழுக்கம் இருக்கு. அதனாலதான் உலக இயக்கம் நடந்துகிட்டு இருக்கு.
ஒழுங்குமுறைகளை ஞாயப்படுத்தி நம்மை அத்துமீற பணிக்கும் வாழ்வியல் சூழலில், அதை மீறாமல் , ஒழுங்கற்ற உலகத்தில் நாம் ஒழுங்காய் வாழ கடவுள் கொள்கையோ, இயற்கைனிலை ஒழுக்கமோ ஏதோ ஒரு பெயரில் நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
"நன்றாங்கால் நல்லவா காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி. நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..? அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம் எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக தேட்டங்கள்தான். . தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்www.kvthaayumaanavan.blogspot.com

அம்மாவின் புடவை

Join http://groups.google.com/group/illam?hl=en அம்மாவின் புடவை என்றவுடன் என்னுடய நினைவுகள் நான் பள்ளியில் படித்த நாட்களை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அந்த நாட்களை நினைத்தால் அதுவும் வெய்யில் கால விடுமுறையை பாட்டி வீட்டிலோ இல்லை பெரியம்மாவின் வீட்டிலோ கழித்த நாட்கள் இன்றும் மனத்தில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சித்தியின் குழ்ந்தைகள், மாமாவின் குழந்தைகள் என்று ஆணும் பெண்ணுமாய் ஒரு பட்டாளமே கிராமத்தின் பெரிய வீட்டில் படையெடுக்கும். தாத்தா பாட்டிககோ பேரக்குழ்ந்தைகளை ஒருமித்து பார்க்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையே கிடயாது.
அந்தக்காலத்திலோ டீவீ கிடையாது. ரேடியோ ஒரு சில வீடுகளில் மட்டும் இருக்கும். காலயில் எழுந்து காபி குடித்தவுடன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் பாண்டியோ இல்லை ஒரு டென்னிஸ் பாளை வைதுக்கொண்டு விளையாடவேண்டியது. 9 மணிக்கு பாட்டியின் அழைப்பு. பூஜை முடித்த கையுடன், ஒரு பெரிய பாத்திரத்தில், பழய சாதத்தில் ஆடையுடன் கூடிய கட்டி தயிரை விட்டு உப்பு போட்டு நன்றாக பிசைந்து, மிஞ்சின குழம்பை கரியடுப்பில் சூடு பண்ணி, எல்லா பேரன் பேத்திகளையும் வட்டமாக அமர்த்தி, ஓரொருத்தர் கையில் அந்த தயிர் சாதத்தை பாசத்துடன் தரும் பொழுது எத்தனை பிடி சாப்பிட்டோம் என்ற கணக்கே தெரியாது. திரும்பவும் மைதானத்தில் சென்று விளையாடுவது வெய்யிலின் சூடு என்ன என்று நினைக்கவே தெரியாது. மதியம் உணவிற்குப்பிறகு ஒரு குட்டி த்தூக்கம் அதுவும் தாத்தாவின் பாசத்துடன் கூடிய கண்டிப்பிற்காக. பெண் குழந்தைகளோ பாட்டியுடன் ஆடு புலி விளையாட்டு இல்லையென்றால் பாம்புக்கட்டம். மாலயில் பாட்டியுடன் பக்கத்திலுள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள பெரிய வெளிப்பராகாரத்தில் சுற்றி வந்து திரும்பவும் பாட்டி கைய்யால் சாதம் சாப்பிட்டுவிட்டு தாத்தாவின் கதையை அல்லது பாட்டி தன்னுடய மக்ன்களும் மகள்களும் சின்ன வயதில் எப்படியெல்லாம் வளர்ந்தார்கள் என்ற பழய நிகழ்ச்சிகளை கேட்பது. வீட்டில் இருப்பதோ இரண்டோ இல்லை மூன்றோ தலயணை. ஒன்றிரண்டு ஜமக்காளத்துடன், பாட்டியின் புடவைகளையும் சேர்த்து படுக்கை தயாரித்து எனக்கு உனக்கு என்று அன்புடன் சண்டை பிடித்து, எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் கழித்த அந்த மகிழ்ச்சியான நாட்கள். பேரன் பேத்திகளுக்காக தாத்தாவின் வயலில் வேலை பார்க்கும் பாட்டக்காரனிடம் பனை நுங்கு, கொல்லாம்பழம், மாம்பழம் போன்ற பழங்களை கொண்டுவரும்படி ஆசையுடனும் அதிகாரத்துடனும் சொல்வது. விடுமுறை முடிந்து திரும்பவும் அவ்ரவர்கள் ஊருக்கு செல்லும்பொழுது, தாத்தா பாட்டியின் கண்ணீருடன் கட்டியணைத்து முத்தமிட்டு அவர்களை நமஸ்காரம் செய்தது இன்னமும் நினைத்தால் கண்ணிர் பெருகி வடிகிறது. அந்த மகிழ்ச்சியான நாட்கள் இன்றய இளைய தலைமுறைக்கு கிடைப்பதில்லை. அன்று அப்படி விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்ததால் தான் - அண்ணா/தம்பி/அக்கா/தங்கை/அத்தான்/அம்மாஞ்சி/அத்தங்கார் என்ற உறவுகள் இன்றும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
இன்றய இளைய தலைமுறை வளர்ந்த விதம், சூழ்னிலை, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு செல்லும் கட்டாயம் குடும்பத்திற்கு ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று ஒரு மகனோ இல்லை மகளோ பொத்தி பொத்தி வளர்கிறார்கள். வெளியூரில் தாத்தா பாட்டி இருந்தாலும், மகனையோ அல்லது மகளையோ விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பும் பக்குவம் இன்றுள்ளபெற்றோருக்கு இருப்பதில்லை. பிள்ளைகளோ அதற்கும் ஒரு படி மேல். "இல்லைம்மா தாத்தா வீட்டிலே போரடிக்கும். ஒரு கம்ப்யூடர்/கேம்ஸ் கூட கிடையாது. என்னை ஸம்மர் கேம்ப்புக்கு அனுப்பும்மா என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க" என்று சொன்னவுடன் அதற்கு மறு வார்த்தை பெற்றோரால் சொல்லமுடிவதில்லை.
ஏன் இப்படி பழசை நினத்து புலம்புகிறார் இந்த மனிசன் என்று சில சமயங்களில் நினைக்கத்தோன்றும். அம்மாவின் புடவை என்ற வார்த்தையை படித்தவுடன் மனதில் உள்ள ஆதங்கம் இந்த கட்டுரை வடிவில் வெளிவந்தது. இல்லம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி
நீலகண்டன்

ஆலயங்கள் அறிவுக் கூடங்களே – 5

For images http://mail.google.com/mail/?ui=2&ik=4f1baacc93&view=att&th=11fc05da1540768c&attid=0.1&disp=vah&realattid=f_frr6iywg0&zwகோவிலின் வெளியேயே கொள்ளை அழகு என்றால் உள்ளே கேட்கவா வேண்டும். உள்ளே போகலாமா?

(http://www.travelblog.org/Photos/21539.html)
உள்ளே பல தூண்கள். இவற்றில் எல்லாம் சிற்ப வேலைப் பாடுகள்.
இந்தத் தூண்கள் மிக அழகான வேலைப் பாடுகள் கொண்டவை. தூண்கள் கூரையோடு சேருமிடத்தில் தேவலோக நடன மங்கையர்களின் உருவங்கள். இவ்வுருவங்கள் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களின் வகைகளும் அவர்கள் காட்டும் அபிநயங்களும் கண்ணுக்கு விருந்து எனலாம்.

http://www.travelblog.org/Photos/21518.html

என்ன நளினம்? என்ன நுணுக்கம்? இப்படிக் கல்லில் செதுக்க எவ்வளவு திறமை வேண்டும்?
மத யானையை அடக்க வேண்டுமா? அதற்கு எவ்வொளவு ஆட்கள் வேண்டும்? எவ்வளவு பலம் வேண்டும்? என்ன மாதிரியான ஆயுதங்கள் வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்தக் காட்சியைப் பாருங்கள்.


(http://www.travelblog.org/Photos/21520.html)
தூண்களின் நடு நாயகமாக விளங்கும் நரசிம்மர் தூண்தான் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் கொண்டது.

நரசிம்மர் தூண்
(http://www.travelblog.org/Photos/21516.html)
ஒரு யானையின் வயிற்றுக் குள்ளே சிவனை தரிசிக்க வேண்டுமா?

(http://www.travelblog.org/Photos/21543.html)
என்ன நுணுக்கம்! என்ன அழகு!
இப்படி ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்துக் கொண்டே வருவதற்குள் மாலைப் பொழுதாகி விடுகிறது.
கூட வந்த சிற்பி திடீரெனப் பாட ஆரம்பிக்கிறார்,
“ஒரு நாள் போதுமா...
இன்றொரு நாள் போதுமா...
நான் பார்க்க இன்றொரு நாள் போதுமா?”
என வித்வான் பால முரளி குரலில்.
ஒரு நாள். அல்ல ஆயுள் பூராவும் பார்த்தால் கூட நம் நாட்டின் கலைப் பொக்கிஷங்களான, அறிவுக் கூடங்களான ஆலயங்களை முற்றிலுமாகப் பார்த்து முடிக்க முடியாது. இப்போது சொல்லுங்கள். ஆலயங்கள் அறிவுக் கூடங்கள்தானே?
நடராஜன் கல்பட்டு
(பின் குறிப்பு:- இந்தக் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள விஷயங்களோ படங்களோ தஞ்சை, ஸ்ரீரங்கம், பேலூர், ஹலேபீடு கோவில்களில் காணப்படும் ஆயிரம் ஆயிரம் அற்புத விஷயங்களில் ஒன்று என்று கூட சொல்ல முடியாது. அதையும் விடக் குறைவே.)

பொதுவில் வைப்போம் -- கவிதை

பெண் பார்க்கும் அவலம் போய் ஆண் பார்க்கும் படலம் வேண்டும்
போய் கடிதம் போடாமல் நேரில் சொல்லவும் வேண்டும் நெஞ்சுரம்.
பொதுவில் வைப்போம் இரு வீட்டார்க்கும் புலம்பலை.
பெண்ணுக்கு மூன்று முடிச்சு எனில்.,ஆணுக்கும் போடட்டும் ஒன்றேனும் சூடு.
ஆண் நடக்கையில் மெட்டி ஒலி இசைக்கட்டும்.
ஆணுக்கும் அதுவே இருக்கட்டும் முதலிரவாய்.
காலில் விழாமல் கை குலுக்கி அரவணைப்போம்.
கனிவு பேச்சு கட்டளை அதட்டல் மிடுக்கான மிரட்டல் அனுதாப பாராட்டல் இத்தனையும் இருக்கட்டும் இருவர்க்கும் பொதுவாய்
.

ஆனாலும்..கருத்தரிப்பும் பிரசவிப்பும் பெண்ணுக்கே நிலைக்கட்டும்.
தாய்மையின் பெருமையை தரவும் முடியாது அதை நீ பெறவும் முடியாது ஆண் மகனே.-- அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.
என் கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

கரகாட்டம் வெறும் ஆட்டமல்ல

சகஸ்ராரத்தைப் பற்றி பேசுகையில் கரகாட்டத்தைப் பற்றிப் பேசாமல்விட்டால் நம் ஆதி தமிழர்களுக்கும் அவர்தம் பொருண்மைகளுக்கும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். தமிழரின் ஒவ்வொரு பழஙகலையும் சாதாரணமானதல்ல. வாழ்வியலின் நகரும் போக்கில் விளையாட்டாய் சொல்லிவைத்தது மட்டுமல்லாமல் அதை கண்முன்னேயும் நிகழ்த்தி காட்டியவர்கள்.
மனித வாழ்வின் தேடலில் உணவு,உறையுள்,உறவு போக மிஞ்சியதெல்லாம், அவனது உயிர்,உடல்,மனம் பற்றிய தேடல்களே என்றால் மிகையில்லை.அவ்வகையில் கரகம்,சிலம்பம்,கும்மி,கோலாட்டம் என அதன் வரிசையில் வருகிற எல்லாமே உடல்,உயிர்,மன தத்துவங்களை சொல்லவந்த பயிற்சி முறைகளே ஆகும்.
கரகாட்டத்தில் என்ன இருக்கிறது..?திருவிழாவின் போது, அதுவும் கிராமத்தில் மட்டும்தான் அதை பார்க்க முடிகிறது. அசிங்கமாக அறைகுறை ஆடையோடு, கொச்சையான இசையும் தாளமும் என முகம் சுழிப்பீர்கள். அதை நாம்தான் அப்படி ஆக்கிவிட்டோம். நம் பொழுதுபோக்குக்காக நாம் செய்த பாவம் அது.
நம் கலாச்சாரத்தில் கும்பம் எனும் சொல்லுக்கு அலாதியான இடம் உண்டு. பூரண்கும்ப மரியாதை என்பார்கள். கோவில் கும்பாபிஷேகம் என்பார்கள். கும்பிடுதல் எனும் வார்த்தையே ஏறக்குறைய கும்பத்தையே குறிப்பதாக கொண்டாலும் தவறில்லை. கும்பம் என்பதன் இன்னொரு அர்த்தம் முழுமை அல்லது நிறைவு என கொள்ளலாம். முழுமுதல் கடவுள் வினாயகரை பாருங்கள் கையில் அழகாக கும்பத்தை வைத்திருப்பார். வீட்டில் நடக்கும் எந்த விஷேத்திற்கும் கல்யாணம்.காதுகுத்து,புதுவீடு புகுதல்,எதுவானாலும் அப்பூஜையில் தவறாமல் இடம் பெறுவது இந்த கும்பம்தான்.
தமிழ்தொல்லுலகில் முழுமைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.எண்ணத்தில் முழுமை,செயலில் முழுமை,இன்னும் பார்வையில்,கேட்பதில், நடப்பதில்,படிப்பதில்,உறங்குவதில் என அனைத்திலுமே முழுமையான வெளிப்பாட்டை காணமுயல்வது தமிழ்தத்துவ உலகின் நோக்கம். அதன் இன்றியமையாமையை குறியீடாக எடுத்து சொல்லவே கரகாட்டம்.
கரகத்தின் அமைப்பு - ஒரு கும்பம் -அதனுள் அரிசி- அரிசி என்பது கிடைத்த உடலுக்கான வாழ்வாதாரம் - கொஞ்சம் நீர்- கொஞ்சம் மணல் - அதை மூடிவைத்த மாதிரி கவிழ்த்துவைக்கப்பட்ட தேங்காய்- தொங்கும் மாவிலைகள்- அதன் மீது பூ அலங்காரம்- உச்சியில் ஒரு கிளி பொம்மை. கரகம் தயாராகிவிட்டது. எடுத்துவைத்து ஆடும் முன் ..
இது நம்க்கு கிடைத்த உடலையும், உயிரையும், மனதையும் அதனை வைத்து நாம் வாழும் வாழ்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வை நம் தலையிலிருந்துதான் வாழ்கிறோம். நம் பிரதான தலைமை செயலகமே தலைதான்.”கொடுக்கிர தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்” என நம் நாட்டுப்புரங்களில் சொல்லும் சொலவடையை கேட்டிருப்பீர்கள். அந்த கூரை உண்மையில் நம் வீட்டு கூரையல்ல. தலை உச்சி..நம் சகஸ்ராரம். நாம் பிறந்தபோதே அது பிய்க்கப்பட்டு கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டது. தரப்பட்டதை எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் பிரச்சினை.
கிளிகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். தனியாக வரும். ஏதோ ஒரு மரத்தில் அமரும். கனிகளை கொத்தும். தனக்கு ஏதேனும் இடைஞ்சல் வருவதாய் தெரிந்தால் சிறகுகளை விரித்துவிடும். நம்க்கும் நம் தலையில் ஒரு கிளி இருக்கிறது. அதுதான் நம் உயிர் கிளி. அதுவாக பறந்துபோக நாம் விட்டுவிடக்கூடாது. “போ..போதும் பறந்துபோ “என சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால்..”போனால் போகட்டும் போடா “என்றோ,”போகுதே..போகுதே என் பைங்கிளி வானிலே”-என சோக கீதம் இசைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
நம் உடலுக்குள் வாழ்வந்த் அக்கிளியை ஆராதித்து, உரிய மரியாதை அளித்து வரவேண்டிய பயிற்சிக்குரியதே கரகாட்டம்.“உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்..”என்கிற வார்த்தையெல்லாம் ஏதோ மேம்போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.
தாயின் கருவறையிலிருந்து என்று நாம் ஜனித்தோமோ அன்றே நம் தலையின் மீது நமக்கான கரகம் ஏற்றப்பட்டுவிட்டது. நாம் வாழ்கிற வாழ்கைதான் ஆட்டம்.கரகத்தை தவறவிடுவோமா..? அல்லது..எந்த சூழல் வந்தாலும் சரி ,எழுந்தாலும்.விழுந்தாலும்,குனிந்தாலும்,பணிந்தாலும், நிமிர்ந்தாலும்,தவழ்ந்தாலும்,படுத்தாலும்,சாய்ந்தாலும், தலையே போனாலும் கரகம் விழாமல், இறை நமக்கு அளித்த அந்த முழுமையை உணர்ந்து , அதன் மூலம்- எண்ணத்தில்,செயலில்,என சகலத்திலும் முழு விழிப்போடு விளையாடி நாமாகவே கரகத்தை இறக்கி வைக்கப் போகிறோமா..?
கரகாட்டத்தை இன்னொரு முறை மனக்கண்ணில் நிறுத்தி பாருங்கள். நாம் எவ்வளவு வைழிப்போடு வாழவேண்டும் என்பதை சொல்லித் தரும்.தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்www.kvthaayumaanavan.blogspot.com

விடுதலை

விடுதலைஅணி திரள்வோம் அணி திரள்வோம்அலை அலையாய் அணி திரள்வோம் அங்கும் இங்கும் எங்கும்!!!!தங்க இடமின்றி தவிக்கும் நம் உறவுகளுக்காககிளர்ந்தெளுவோம்.
சொந்த மண்ணிலே இரத்த உறவுகளைஓடஓட விரட்டும் சிங்கள அரசுநாட்கள் பறக்கின்றன -அங்கேஉயிர்கள் பறக்கின்றன கூக்குரலுடன்!!!உலகமோ உறங்குகின்றது.
மக்களை பாதுகாக்க வேண்டும்வாய் வார்த்தையுடன் முடிந்து விடும்அவர்கள் பேச்சு!!!புலம் பெயர்ந்த நாம்-எம்உயிரசைவினால் உறவுகளை காப்பாற்றஉலகுக்கு முழக்கமிட்டோம்.
முழக்கமிடுவோம்-ஆனால்உலகமோ தூங்குகிறது அல்லதுதூங்குவது போல் நடிக்கிறதா-ஆனால்அங்கே நடப்பது சினிமா அல்லநிஜம் உறவுகளின் நிஜமான அலறல்கள்

திருநீலகண்டர்தான் எல்லோரும்..!

இறை மையமான சகஸ்ராரம்-தொடர்ந்து நம் சுயம் துலங்கும் ஆக்ஞாவாகியநெற்றிப்பொட்டு - இப்போது நாம் இறங்கி வந்திருக்கும் இடம் விசுக்தி.பாம்பினைக்கொண்டு பார்கடைக்கடைந்து கிடைத்த அமிர்தத்தை தேவர்கள்பருக,துணைப்பொருளாய் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். அந்தவிஷம் உள்ளிறங்காமல் சக்தி தன் கைகளால் சிவனின் தொண்டையில் அழுத்தவிஷத்தின் விஷத்தன்மைமுறிந்தது. அன்றிலிருந்து சிவன் திருனீலகண்டர்ஆனதாய் கதை ஒன்று உண்டு. கதையாக கேட்கும் வரைதான் இது கதை.
நம் உடலில் விசுக்தி என்று சொல்லப்படும் இந்த மையம் வெகுசிறப்புதன்மைகளைக்கொண்டது.நம் தொண்டை இங்குதான் உள்ளது.உந்தி கமலத்துகாற்றை மேலுழுப்பி நாவை மேலன்னத்திலும்,கீழன்னத்திலும் தொட்டசைத்துமொழியாய் பேச அடுத்தவருக்கு கேட்கிறதே -அந்த ஓசையை எழுப்பும்-குரல்வளையும் இங்குதான் உள்ளது. நாக்கில் வைக்கப்பட்ட உணவானது சுவைஅரும்புகளால் உணரப்பட்டு, பற்களால் அரைப்பட்டு விழுங்கியதும் உணவு பைக்குபோகிறது அல்லவா..?அந்த் கிடங்கிற்கு உணவை எடுத்து செல்லும் உணவு குழாயும்இந்த விசுக்தி மையத்தில்தான் உள்ளது. நாசியின் வழியாக சுவாசிக்கிறோமே,அந்த மூச்சுக்குழாயும் இந்த மையத்தில்தான் உள்ளது.ஆக விசுக்தியின்சங்கமத்தில் குரவளை,உணவுகுழாய்,மூச்சுகுழாய் என மூன்றும் அணிவகுத்துநிற்கிறது.
இந்த மையம் அடைப்பட்டால்- உணவு உள் போகாது-பேசமுடியாது- சுவாசிக்கமுடியாது.வெளியே இருந்து வரும் உணவை உள்ளே அனுப்பவும், உள்ளேயிருந்துஎச்சிலையோ ,சளியையோ வெளியே எடுக்கவுமென இந்த மையம் செய்யும் ஒவ்வொருபணியும் விசித்திரமானவை. உணவும்,சுவாசமும்,பேசும் சொல்லும் இந்த மையத்தைகடக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் "கண்டம் கடத்தல்" என்றொருபிரயோகத்தை கையாண்டார்கள். கண்டம் என்றால் ஆபத்து என ஒருபொருள்கொண்டிருக்கிறோம். சாதாரண ஆபத்தல்ல. உயிருக்கு விளையும் ஆபத்தைகண்டம் என சொல்லி வருகிறோம். சிலர் எனக்கு தண்ணியில் கண்டம். எனக்குபயணத்துல கண்டம் என சொல்வதுண்டு.
உண்மையில் அதுவல்ல பொருள்- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவர்தம்குடும்பத்தினர் வரிசையாய் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றுகையில் அதுகண்டத்தை கடக்கவேண்டும்.அப்படி கடக்காமல் அது திரும்பிவிடுமானால் அவர்இறப்பை அடைகிறார். எத்தனை பேர் வாழ்வில் இதை பார்த்தாயிற்று.
சிவபெருமானுக்கு இருக்கும் அதே கண்டம்தான் நமக்கும் இருக்கிறது. இதில்ஒரு சந்தேகமும் வேண்டாம். சிவனுக்காவது விஷத்தை முறிக்க சக்திதேவப்பட்டாள். நமக்கு அதுவும் தேவை இல்லை.அனைத்தையும் நம் தொண்டையேபார்த்துக்கொள்கிறது. ஆம் நம் ஒவ்வொருவரின் தொண்டையும் விஷத்தைமுறிக்கும் வல்லமையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. நாம் உண்ணும் அன்றாடஉணவில் அமிர்த மயத்தோடே, விஷமும் இருக்கிறது. அதை தினமும் இந்ததொண்டைதான் முறித்துக்கொண்டிருக்கிறது. நாமும் திருனீல் கண்டர்கள்தான்.
இந்த மையம் மிக நடுனிலையானது. நீதி நேர்மை தவறாதது. விழுங்கும் கவளஉணவில், முடியோ,கல்லோ,அல்லது ஒவ்வாத ஒன்றை - கிரிக்கெட் விளையாட்டை,சீரியல பார்த்தபடியே விழிப்பின்றி நாம் விழுங்கிவிடலாம். ஆனால் அய்யா'தொண்டைமான் 'அவ்வளவு எளிதில் அதை உள்ளே விட்டுவிட மாட்டார். அந்தநொடிப்பொழுதில் ஆய்ந்துணர்வார், ஒவ்வாத ஏதேனும் இருக்குமெனில் அது உள்ளேபோகாமல், உணர்த்தப்பட்டு "பாவி கல்லை விழுங்க பார்த்தியே"என்றுமென்மையாய் கடிந்து அதை வெளியே துப்பும், குமட்டுகிற மாதிரி பாவிக்கும்.தொலைக்காட்சியில் ஆழ்ந்த நாம் சுயத்துக்கு வந்து, கருத்தாய் அந்த்துணுக்கை எடுத்துப்போட்டுவிட்டு, மீண்டும் தொலைகாட்சியில் ஆள்வோம்.
தவிர்க்கமுடியாமல் பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலை வரும்போது இந்தமைய்த்துக்குரிய நம் 'தொண்டைமான்' அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.காரணம் எண்ணம் ஏதும் அற்ற சகஸ்ராரத்திலிருந்து வாழ்வின் நிமித்தம் நாம்நெற்றியிலிருந்து சிந்தித்த ஏதோ ஒரு எண்ணத்தை, மூலாதாரத்திலிருந்துபெற்ப்பட்ட சக்தியின் உதவியோடு வாய்வழியாய் பேசுவது இந்தவிசுக்தியினால்தான். இயல்பாகவே நம் உடல் தூய்மையின் இருப்பிடமாய்திகழ்கிறது. இதை பெரும்பாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் தன்முதலாளிக்காக பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலையில், அதை செய்துவிட்டு,அதற்கான சுய பரிகாரமாய், தொண்டை எச்சில்கூட்டி விழுங்கி தன் பொய்மையைவிழுங்கும். இதயம் ஒரு கணம் அதிரும்..'ஆ..நம்மாளு பொய் சொல்லிட்டாரா.."வயிற்றில் ஒரு பந்து உருளும். இப்படி எல்லா மையங்களுமே ஒருஅதிர்வுக்குள்ளாக, மனம் அதை ஞாயப்படுத்தும். பிறகே உடலில் சகஜ நிலைவரும். நம் உடலும்,மனமும்,உயிரும் சாதாரணமான விஷயங்கள் அல்ல என்பதை நாம்புரிந்துகொள்ளவேண்டும்.
எண்ணமாக இருக்கும் வரை அது வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை.பேசிவிட்டாலோ..அதற்கு பின் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்குஎஜமானர்களாகிவிடுவார்கள். பேசிய பேச்சுக்கு நாம் பொறுப்பேற்கவேண்டியகட்டாயம் உண்டாகிவிடும். அதனால்தான் விசுக்தி மையத்தை நாம் நடுனிலைமையம்,நீதி மையம். உடலின் சோதனி சாவடி என்றெல்லாம் அழைக்கிறோம்.
நம் முன்னோர்கள் தோளில் துண்டு அணிவதை பார்த்திருக்கிறீர்களா..? ஆமாபெரியமனுஷனாட்டம் கழுத்துல ஒரு துண்டு என கேலி பேசுவதைகேட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த துண்டு அணிதல் என்பது ஒவ்வொருமனிதரிடமும் இருக்கும் நடுனிலை தன்மையை வெளிப்படுத்தும் ஒருஅடையாளமாகும். பெரியவர்கள் அந்த துண்டை வலது பக்கத்திற்கும், இடதுபக்கத்திற்கும் சமமாக இருக்குமாறு அணிவார்கள். இதன் அர்த்தம் நான் எந்தபககமும் சாய மாட்டேன். உண்மையின் பக்கமே இருப்பேன் என்பதன்வெளிப்பாடே.இப்போது நம் அரசியல்வாதிகள் மட்டும்தான் துண்டு அணிகிறார்கள்.கழுத்தில் சமனிலையாய் சுற்றாமல், ஒரே பக்கமாக அரையும் குறையுமாகதொங்கும். அப்புறம் அவர்களிடம் நாம் எப்படி நடுனிலை தன்மையைஎதிர்பார்க்கமுடியும்..?
நம் விசுக்தியில் உணவிலிருக்கும் விஷம் மட்டுமல்ல- கருத்து பொருள் மூலம்நுழைய பார்க்கும் விஷமும் முறியவேண்டும். நடுனிலை உணரப்படவேண்டும்.நாம் எண்ணிய எண்ணம் இறைனிலையிலிருந்து, அதன் சத்தியத்தின் பொருள் உணர்ந்தநிலையிலைருந்து எண்ணப்பட்டிருந்தால்.,நாம் பேசும் வார்த்தைகளால்யாருக்கும் எந்த தீங்கும் நேரப்போவதில்லை. மாறாக ஏதோ பேசினோம் எனபேசினால், கேட்பவர்கள் எதிர்வினை காட்டுவார்கள். அதைஎதிர்கொள்ளவேண்டியிருக்கும். நம் விழிப்பற்ற தன்மையால் ஏற்படும் முதல்விபத்து இங்கிருந்துதான் துவங்குகிறது. வாழ்கை போராட்டமாவதுபேசுவதிலிருந்துதான். இதற்கு பிறகு நாம் அறிவு நிலையிலிருந்து விலகி,நடுனிலையிலிருந்து விலகி, அடுத்த உணர்வு மையமான அனாகத்திற்கு வந்துஅனுபவிக்கும் வேதனைகள்....அடுத்ததில் தொடருவோம்.....
--என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!தமிழ்'அழகி'யுடன்வெங்கட்.தாயுமானவன்
செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamiltransliterator.(அழகிய தமிழ்மகள்)
என் தமிழோடு கைகுலுக்க(www.kvthaayumaanavan.blogspot.com)

உயிர் பெரிது

"மாலை வரும்போதுசாக்லெட் பலூன் கேக்எல்லாம் வாங்கி வாப்பாநான் வாசலில் காத்திருப்பேன்"அதிகாரியின் மகள்.

"சாயங்காலம் வரும்போதுஎனக்கு ஒன்னும் வாணாம்நீ மட்டும்பத்திரமாதிரும்பி வாப்பாநான் கடலோரத்திலேயேகாத்திருப்பேன்"மீனவனின் மகள்.--அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம்அதை எந்த நாளும் காப்போம்.
என் கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

அகமும் புறமும்

அகமும் புறமும்
புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒருதிவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளிஇன்பத்தைத் தேடவே மாட்டான். தன்னைத் தானே அனுபவித்துக்கொண்டு ஆனந்தசமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையை விட்டுவராமல் இருந்தாலும், அதனிடம் நதிகள்போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வ‌ந்து விழுந்துசமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். " அபூர்வ மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்திரம் "எ‌ன்று கீதை சொன்ன மாதிரி பேரின்பக் கடலாகநிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல்பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திரபதவியின் ஆனந்தம் கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார்ஸ்ரீ பகவத் பாதர்கள் : 'யத்சௌக்யாம்புதிலேச லேசத இமே சக்ராதயோ நிர்விருதா:' [மனீஷா பஞசகம்.]
பதவி, பணம், ஸ்தீரி, புருஷாள், கௌரவம், விளம்பரம் [பப்ளிஸிடி] -என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாகஎண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும், சமுத்திரமாக இருக்கிறநா‌ம் அதை அறியாமல் ஒரு சொட்டுஜலத்திற்காகத் தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காதலால்நமக்குக் குறை வந்துவிட்டதாகத்துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரணவஸ்து. நமக்கு அந்நியமாக வெளி என்றேஒ‌ன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நம்முள்ளேயே அடக்கம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடிஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசங்கராச்சார்ய ஸ்வாமிகள்
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

இதயம் ஒரு கோவில் -அனாகதம்

இறைமயமும் ஒருமைனிலையும் ஒருங்கே அமைந்த முதல் மையம் சகஸ்ராரம். அங்கு பொறி புலன் ஒடுங்கி - சும்மா இருப்பதே சுகமெனு உயர் நிலையில் இருந்த நாம்- நம் இருப்பை உலகுக்கு அறிவிக்க ஒரு எண்ணம் பிறந்து நெற்றி எனும் ஆக்ஞாவில் சுயத்தை உணர்ந்தோம். எண்ணிய அந்த எண்ணத்தை மொழிக்கூறின் ஊடாக விசுக்தி எனும் தொண்டைகுழி வழியே பேசினோம். நாம் ஒன்றை பேசுவது அடுத்தவரை நோக்கியோ அல்ல்து சமுகத்தையாதாகவோ இருக்கும். பேசியவர் ஒருமை எனும் தன்னிலையிலும், கேட்பவர்கள் ஒருவராகவும், பலராகவும் இருக்ககூடும் என்பதால்,நம் கருத்துக்கு ஒப்புதலோ, எதிர்ப்போ எழுவது தவிர்க்க முடியாத கட்டாயம். இந்த மெய்மையை நாம் வாழ்வின் கணந்தோறும் அனுபவிக்கிறோம். அதற்கான எதிர்வினையை காட்டும் மையமாகத்தான் அனாகதம் என்கிற உணர்வு மையம் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது.
தன் நெற்றியில் பிறந்த ஒரு எண்ணத்தை ஒருவர் இப்படி அறிவித்தார்."நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..........."கையை நீட்டி உலகுக்கெல்லாம் காட்டி தன்னை - நல்லா கேட்டுக்கோங்க "நான் வேற யாருமில்ல...உங்க வீட்டு பிள்ளை....."-அப்படின்னாரு.இதை ஒத்துக்கறவங்களும் இருப்பாங்க- மறுப்பவங்களும் இருப்பாங்க- எதிர்க்கறவங்க என்ன கேட்க முடியும்..?"அது எப்படி நீ எங்க வீட்டு பிள்ளை ஆக முடியும்,,?" அப்ப்டிங்கற கேள்வி வரற்துக்கு முன்னாலியே, அடுத்த வரி வரும்.."இது ஊரறிந்த உண்மை..." அடடா உங்களுக்கு இந்த உண்மை தெரியலன்னா நான் செய்யட்டுங்கிற மாதிரி எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு முன்னரே- தற்புரிதலுக்கான விடையையும் தந்திருப்பார்.அவருக்கு சரி- நாம் ஒன்றைசொல்லி சமுகம் கேள்வி எழுப்பும்போது - விடையும் விளக்கமும் தரும்முன்னர் இந்த மையம் அதிரும், துடிக்கும்.."ஆ..நான் சொன்னதை யாரும் ஒப்புக்கலையே.."வெம்பும்.
அனாகதம் எங்கிருக்கிறது- நம் உடலில் கழுத்துக்கு கீழே - இதய்த்திற்கும், நுரையீரலுக்கும் நடுனாயகமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதயத்தின் வேலை உதிரத்தை நொடிதொறும் சுத்தம் செய்து உடல்முழுவதற்கும் அனுப்புவது. நுரையீரலின் வேலை -உடலின் காற்று வரவு செலவை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்தல்.இதயம் இயல்பாகவே துடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஆரோக்கியமான உடல் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்க வேண்டும், சுவாசம் எத்தனை முறை ஏறி இறங்கவேண்டும் என்றெல்லாம் முறையான கணக்கு உண்டு. இதெல்லாம் நமக்கு தெரியாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று இதய துடிப்பை கூட்டிக்கொண்டோ, அல்லது குறைத்துக்கொண்டோ துன்பப்படுகிறோம்.
நம் உடலின் ஆதார சக்கரங்களின் இயல்பு பற்றி இன்னொரு குறிப்பு தருகிறேன். எப்படி நெற்றி எண்ணியதை வாய் பேசியதோ - இந்த சங்கதியை இப்படி உணர் என இதய்த்துக்கு அறிவு சொல்லி இதயம் உணருமோ அதைப்போலவே, சமயங்களில் கீழிருக்கும் மையங்கள் நெற்றியை தங்களுக்கு ஏற்றமாதிரி நெற்றியை சிந்திக்க சொல்லும்.கயிறு பாம்பாகி பயமுறுத்துவதும், பாம்பு கயிறாகி தூக்கி வீசப்படுவதும் இதனால்தான்.
இந்த மையத்தில் உதிர ஓட்டம் எப்படி தடையில்லாமல் நடக்கிறதோ இறந்துப்பட்ட செல்கள் ஒதுக்கப்பட்டு - நித்தமும் நவனவமாய் புது மூலக்கூறுகள் உருவாகிறதோ அதைப்போல நாம் பார்க்கும் நிகழ்வுகளின், கேட்கும் நிஜங்களின் வீர்யத்தையும், படிக்கும் விபரீதங்களையும், பார்த்து, கேட்டு, படித்து முடித்தவுடன் வெகு இயல்பாக அதை புது ஓட்டத்திற்குரிய சிந்தனை பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் உணர்வு மையம் உங்களை அங்கிருந்து நகரவிடாது. நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறோம்- சாலையில் ஒரு கொடூர விபத்து பார்க்கிறோம். எது எங்கே இருக்கிறதென்றே தெரியாத நிலை.எனென்ன வகையான விளைவுகள் நிகழ்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒருவரால் அடுத்த மூட்ரு நாளுக்கு சாப்பிட முடியவில்லை. அனாகதம் அந்த காட்சியை திரும்ப திரும்ப நெற்றியில் வைத்து பார்க்க வைத்து அதிலிருந்து மீல முடியாமல் ஆட்டுவிக்கிறது. இன்னொருவர் பார்த்ததுமே மயங்கிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகவேண்டிய நிலை. இன்னொருவர் "ராங் சைடுல வந்திருக்காரு அதான் மாட்டிக்கிட்டாரு" தர்கரீதியாக சிந்திக்கிறார். ஒருவர் "சின்ன வயசு ஆளா "என்கிறார்.வயதை வைத்து மரணத்தை ஞாயப்படுத்திக்கொள்ளும் தனக்குதான் நீதிபதி இவர். இன்னொரு ஆசாமி இருக்காரு அவர் என்ன செய்வாரு தெரியுமா.."ஒரே தூக்கா தூக்கி இருக்கான்யா..ஒடம்பு சட்னி ஆயிருச்சி" என ரசிக்கிறார். இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம்.
இதை நாம் பட்டியிலிட காரணம்- நாம் என்ன செய்வோம் என நினைத்து பார்ப்பதுதான். அனாகத மையத்திலேயே அதை சுமந்துகொண்டிருக்கப் போகிறோமா..? அல்லது "சரி. விதி வந்துச்சி நடந்துச்சி. பாவம் அந்த ஆன்மா சாந்தி அடையட்டும், அந்த குடும்பம் கஷ்டம் இல்லாம கரை ஏற வழி காட்டுடா ஆண்டவான்னு" அடுத்த நிகழ்வுக்கு தயாராகப்போகிறோமா..?
அனாகத மையத்தின் அடுத்த இயல்பு இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவித்தல்.ஆம் லாட்டரியில் கோடி விழுந்தால் இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. விழவில்லை எனில் துன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. கிரிக்கெட்டில் கடைசி பந்தில் ஆறு ரன் அடித்தால் ஒருவர் சாகிறார். அடிக்காவிடில் இன்னொருவர் சாகிறார்.அனாகத மையத்தை மிக சரியாக கையாள வேண்டும். நம் மனதின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கிடங்கு இது.கோபம்,எரிச்சல்,வெறுப்பு,அன்பு,கருணை,இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் குத்தகைதாரர் இவர்தான். மனிதருக்கு வரும் சகல நோய்க்குமான அடித்தளம் இந்த மையத்தில்தான் இடப்படுகிறது. மனதுக்கும் சசுவாசத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல், மனதுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால்தான் விழிப்பில்லா மனம் சட்டென அதிர்ச்சியில் உறைய இதயம் படபடவென துடிக்க துவங்குகிறது.
இதயம் வேகமாக துடித்தால் -சுவாசம் எகிறும்- சுவாசம் எகிறினால் மந்துக்கு அளவற்ற ஆக்சிஜன் போய் - என்ன செய்வது எந்த மையத்திற்கு ஆணையிடுவது என தெரியாமல்- வாய் குளறல்- ஒரு அதிர்வை கண்டதும் ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம். இன்னும் சிலருக்கு சிறு நீர் தானாய் கழிதல், பெரும்பாலானோருக்கு மாரடைப்பு.ரத்த குழாய் வெடிப்பு.
பயப்படவேண்டாம். பின் இந்த மையத்தை எப்படித்தான் மேலாண்மை செய்வது..?கத்தரை பாருங்கள். தூய நெஞ்சில் பேரொளி பிரகாசிப்பது தெரிகிறதா..?சீதையிடம் அனுமன் நெஞ்சை பிளந்து காடினானே- அதைப்போல- நன்கு உணரப்பட்ட இறைனிலையை அல்லது இயற்கை ஒழுங்குனிலையை அங்கு பதியன் போடுவதுதான். உணர்ச்சிகளின் கட்டுக்குள் சிக்கி விடாமல்- அறிவாலும், விழிப்புணர்வினாலும் நாம் இந்த மையத்தை மேய்க்க வேண்டும்.
மிக சரியாக நிர்வகிக்கப்படும் அனாகதத்தால் துன்பமில்லை - நோயுமில்லை- உணர்ச்சிவசப்படுதல் இல்லை.எல்லாமே நம் கட்டுக்குள். கட்டாவிட்டால் தொடர்விளைவுகளை சந்திக்க அடுத்த மையம் தூண்டப்படும். எப்படி,,,?மீண்டும் தொடர்வோம்.....


என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!தமிழ்'அழகி'யுடன்வெங்கட்.தாயுமானவன்
செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com/) easy tamil transliterator.(அழகிய தமிழ்மகள்)
என் தமிழோடு கைகுலுக்க(http://www.kvthaayumaanavan.blogspot.com/)

“தாய் சொல்லைத் தட்டாதே”

தாயுமானவன் சாரு கேக்குறாரு. நான் எளுதி இருக்கேன். இணெப்பெத் தொறந்து பாருங்க.
நன்றி. வணக்கமுங்க.
நடராஜன் கல்பட்டு
-----------------------------------------------------------------------
“தாய் சொல்லைத் தட்டாதே” ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதெப் போல “தாயு சொல்லெத் தட்டாதே” ன்னு இதெ எளுதறேனுங்க. (அதாங்க தாயுமானவங்கற பேரெ சில ஊடுங்கள்லெ செல்லமா, “தாயூ... தாயூ” ந்னுதான் கூப்பிடுவாங்க இல்லியா?)
நான் ஏளாம் வகுப்பு வறெக்கும் பொன்மலெ ரயில்வே ஸ்கூல்லெ படிச்சேங்க. நாலாங்கிளாசுலெ மணி ஐயர்னு ஒரு வாத்தியாரு. அவரு இன்னும் அஞ்சாறு வாத்தியாருங்க மாதிரி சைகிள்லெ தான் வருவாரு. வருஷ ஆரம்பத்துலெ கிளாசுக்கு மானீடர்னு நல்ல வாட்ட சாட்டமா இருக்குற ஒரு பையனெத் தேர்ந்து எடுப்பாரு. அந்தப் பையனோட வேலெ ஆபீசு ரூமுலேந்து சாக்கு பீசு டப்பா வாங்கியாந்து கொடுக்கறது, போர்டெ அழிச்சு க்ளீனா வெக்கெறது, அப்பொப்பொ வாத்யார் சொல்ற வேலெயெச் செய்யறது. அதாவது வாத்தியார் பாடம் நடத்துறபோது பெசிகிட்டு இருக்குற பையங்க தலெலெ ஒரு குட்டு வெய்க்கறது. இப்படிப் பல வேலெ. ஆனா இது எல்லத்தையும் விட ஒரு முக்கியமான வேலெ காலெலெ வாத்தியார் வந்த ஒடனே அவரு சைகிளெத் தினமும் தொடச்சு வாரத்துலெ ஒரு நாள் எண்ணெ போடறது.
அந்தெ பள்ளிக்கூடத்துலெ வேறெ சில வாத்தியாருங்க கிட்டெ புது சைகிள் கூட இருந்திச்சு. ஆனா மணி ஐயரு சைகிள்தான் எல்லாரு சைகிளையும் விட பள பளன்னு இருக்கும். நல்லாவும் ஓடும். அவரப் பாத்து கத்துகிட்ட இந்த விசயத்தெ நானும் எங்கிட்டெ ஆறாங் கிளாசுலேந்து பியெஸ்ஸி வறெ வெச்சுகிட்டு இருந்த சைகிளெ நல்லா தொடச்சு எண்ணெ போட்டு வெச்சுக் கெறதுலெ கடெ புடிச்சேனுங்க.
அப்பாலெ கான்பூருலெ வேலெக்கிப் போனப்பொ ஒரு சைகிள் வாங்கினேன். அதெயும் தொடெச்சு அப்பொப்பொ எண்ணெ போட்டு வெச்சிகிட்டு இருந்தேனுங்க. அந்தெ சைகிளெ ஊட்டுக்கு வெளியெ வெய்க்கெறது இல்லீங்க. என் கயித்துக் கட்டிலுக்குப் பக்கத்துலேயெ வெச்சுக்குவேனுங்க. எங்கூட இருந்த இன்னோரு
ஆளு கிண்டல் பண்ணுவாருங்க. “என்ன சைகிளுதான் ஒம் பொஞ்சாதியா? கட்டிகிட்டெ தூங்குவெ போலெ இருக்கே?” ன்னு.
பொஞ்சாதியோ, சைகிளோ இல்லெ நம்ம ஒடம்பொ நாம நல்லா பாத்துகிட்டாத் தானுங்களெ அதுங்களும் நமக்கு நல்ல ஒத்தாசையா இருக்கும்?
நம்ம ஒடம்பும் சைகிள் மாதிரி தானுங்க. நட்டு, போல்ட்டு, ஜாயின்டு, சக்கரம், ட்யூபு, டயருன்னு வெளிப்படையாத் தெரியாட்டியும் இதெல்லாம் உள்றெ இருக்குதுங்க. இல்லாடி இப்பிடி நாமெ ஓடி ஆடிகிட்டு இருக்க முடியுங்களா? அதுக்கும் அப்பொபொ எண்ணெ போட்டு வெச்சுகிட்டாத்தான் நல்லா ஒடுங்க.
ஆதி காலத்துலேந்து நம்ம நாட்டுலெ வெள்ளி கெளெமெ பொம்பளைங்களும் சனிக் கெளெமெ ஆம்பிளைங்களும் எண்ணெ சீயக்கா தேச்சுக் குளிக்கறாது பளக்கங்க. அப்படி எண்ணெ சீயக்கா தேச்சுக் குளிக்கெறதுனாலெ ஒடம்புக்கு, முக்கியமா சருமம், முட்டிங்க இன்னும் மத்த மூட்டுங்க, தலெ மயிரு இதுக்கெல்லாம் வேணூங்கெற போஷாக்குக் கெடெய்க்குதுங்க. பொம்பிளைங்க தலெ மயிரும் சிடுக்காகாமெ இருக்குங்க.
இப்பொல்லாம் டீவிலெ ஒரு வெளெம்பரம் காமிக்கிறாங்க. ஒரு தலெ துவட்டுற துண்டுலெ நெறெய மயிரெக் காட்டி, “நீங்க இப்பொ ஒபெயோகிக்கிற ஷேம்பூனாலெ மயிரு இப்படிக் கொட்டுதா? எங்க கம்பெனி ஷேம்பூவெ உபயோகிங்க. மயிரு கொட்டாது” ன்னு. மயிரு இருந்தாத் தானுங்களே கொட்டறத்துக்கு? அதுதான் கண்ட ரசாயனப் பொருளுங்க கலந்த ஷேம்பூக்கெளெ ஒபயோகிச்சு கொஞ்சம் கொஞ்சமா கொறெஞ்சுகிட்டே வருதுங்களே.
நான் சுமாரா இருபத்தஞ்சு முப்பது வருஷம், அதாங்க ஆத்தா கூட இருந்த வரெக்கும், எண்ணெ தேச்சுக் குளிக்கிற சுகத்தெ அனுபவிச்சிருக்கேனுங்க. எண்ணெ தேச்சுக் குளிச்சன்னிக்கி மத்யானம் ஒரு தூக்கம் வரும் பாருங்க அந்த மாதிரி சுகமான தூக்கம் காசு கொடுத்து வாங்கற தூக்க மாத்திரெ சாப்பிட்டக் கூட வராதுங்க.
இப்ப எண்பது வயசுலெ தோல் வியாதிங்க வந்து அவஸ்தைப் படுறேனுங்க. மார்சு மாசத்துலேந்து அக்டோபர் நவம்பர் வரெ வெளிலெ தல காட்ட முடியறது இல்லீங்க. மின் விசிறிக்கு முன்னாலேந்து நகர முடியறது இல்லீங்க. டாக்டரு கிட்டெ போனா அவரு சொல்றாரு, “ஒங்க தோலுலெ கொழுப்புச் சத்தும் ஈரப் பதமும் இல்லெ. காலெல்லாம் பாருங்க சுண்ணாம்புக் காளவாய்லெருந்து வந்தாப்ப்ளெ இருக்குக்கு. இந்த லோஷனெ வாங்கி ஒரு நாளெக்கு மூணு நாலு வேளெ ஒடம்பு பூராத் தடவிக்கோங்க” ன்னு. ஒரு சீட்டு எளுதிக் கொடுத்தாரு. மருந்தெ வாங்கிட்டு வந்து அதுலெ என்னல்லாம் இருக்குதுன்னு பாத்தா ஆலிவ் எண்ணெ 3 சத வீதம், 0.25 சத வீதம் ஒரு சோப்பு மாதிரியான ரசாயனப் பொருளு, 96.75 சத வீதம் தண்ணி. வெலெ கொஞ்சமா 115/- ரூவாங்க ஒரு 100 மில்லி பாட்டுலுக்கு. அதாவது ஒரு டீஸ்பூனெ விடக் கொறெவான 3 மில்லி எண்ணெ 115/- ரூவாங்க!
ஒளவைப் பாட்டி சொன்னாப்புளெ தவறாமெ சனி நீராடியிருந்தா (சனிக் கெளெமெ சனிக் கெளெமெ எண்ணெ தேச்சுக் குளிச்சிருந்தா) இப்பொ இப்படி டாக்டரு ஊட்டுக்கும் மருந்துக் கடெக்குமா ஆடிகிட்டு இருக்க வாணாமோ என்னமோ?

நடராஜன் கல்பட்டு

நான் யார்?

நீ உடலும் அல்ல; மனமும் அல்ல. நீ தொடக்கம், முடிவு, எல்லை இல்லாத ஆன்மா. அதை அறிந்துணர 'நான் யார்?' என்ற விசாரம் ஒரு வழி. - ஸ்ரீ ரமண மஹரிஷி

கழுவி செல்லும் மழை

கழுவிச் செல்லும் மழை.
கழுகுகளின் மாமிச அலகுகளையும் அன்று பிறந்த அதன் குஞ்சுகளையும் காய்ந்த சுள்ளிகளின் திறந்த வெளி வீட்டையும் கழுவி செல்லும் மழை.
ஆடையுதிர்த்த மரங்களின் சருகுகளை தன் அமானுஷ்ய விரல்களால் களைந்து காற்றிலடித்து மரங்களின் முண்டுகள் தடவிவழிந்தோடியது மழை
வானைத் துளாவிய ஒற்றடை குச்சிகளின் நுனிகளெங்கும் ஒரே இரவில் பச்சை துளிர்களின் மருதாணிப் பதியல்.
மழைப் புள்ளிகளின் முத்த மழையில் ஆண்டுகளின் அழுக்கு கழுவப்பட்டு வீதியெங்கும் காலடி கோலங்கள்.
குழைய குழைய செம்மண்ணோடு மேகமழையில் சர்க்கரை பாகு.
கல்லுக்குள் புதைந்த தேரைகளின் காட்டில் மழை கல்யாண களையோடு இரவெல்லாம் கச்சேரி.
ஓடி வந்த நீருக்கு வீட்டைதந்து விட்டு திண்னையில் ஒண்டியிருக்கும்..நானும் என் கவிதையும்

-- அன்புடன் தயானிதாயுமானவன்
கணினியை தமிழ்மயமாக்க (www.free.azhagi.com)
என் படைப்புகளின் முகவரிwww.dhayanithaayumaanavan.blogspot.com

தாகத் தீ..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தாகத் தீ
காத்திருந்து வாங்கினர் கொள்கலனடைந்தவெடிக்கும் தீயை..,உரசலின் நெருப்பில்தகித்த மூங்கில்காட்டுக்கு அவசியப்படவில்லைசிக்கி முக்கி கல்..!
காலவெளி பெருநெருப்பை மூடிவைத்தனர் மூச்சுக்காற்றில்..!
அடுக்குமாடி குடியிருப்புகள்ஆலாய் பறந்தன அசுரப் பசி தாகத்தில் பச்சைக் கீரையின் கொள்ளை விலையில் பசி தீர்த்தன கலோரி மாத்திரைகள்
நீர்க் குழாயில் வழிகிறது வெள்ளை தங்கம் நீர் வேண்டி கைபேசி வழியலறும்தாகம் தோய்ந்த வீடுகளின் நாவுகள்..!
சூரியனைப் பிட்டு வெப்பம் விற்கும் அணுமின் மனிதன்.
பறக்கும் தட்டுகள்கொள்ளையிடக்கூடும் நிலவிலுறையும் பனியை..
கிரகவாசல்தோறும் அழைப்புமணியழுத்த முண்டியடிக்கும் மனிதவிரல்களின்ரேகை குவியல்.
மின்கலன் சுமந்த என்னிதயத்தில் வெட்டவெளியாய் பற்றி எரிந்தது தாகத்தின் தீ...!


-- அன்புடன் தயானிதாயுமானவன்
கணினியை தமிழ்மயமாக்க (www.free.azhagi.com)
என் படைப்புகளின் முகவரிwww.dhayanithaayumaanavan.blogspot.com

கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

வானவில் உதிர்த்த வண்ண வண்ண பூக்கள் வண்ணத்துப் பூச்சிகள்
*******
தற்கொலைக்கு முயன்றால் கிணற்றுக்குள் எனக்கு முன் நீயுமா நிலாவே..?
********
வியர்த்தது விட்டில் பூச்சிமரண பயமல்ல..,மானுட பயம்.
*********
தலை கனக்க பூ வைத்திருக்கிறாள் விதவை ,பூக்கூடையில்.
*********
கடவுள் கையில் ஆயுதம்,பயம் யாரிடம்.?
********
வயல்காட்டிலும் நாகரீகம் பேண்ட் சட்டையுடன் சோளக்கொல்லை பொம்மை.
********
வெயிலில் ஆடு மேய்த்துபுழுங்கிய சிறுவனுக்கு ,குடைபிடித்தது பனை.
*********
மண்ணில் வீழ்ந்தால் மாயும் உருவென்று,தும்பை மேல் தூங்கும் பனி.
**********
விண்ணுக்கும் ம்ண்ணுக்கும் காதல் தூது,மழை.
**********
தொலைந்து போனேன் தேடி வந்தது,வானத்து நிலா.
*********
-- அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.
கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

எது சரி..? எது தவறு..? - மணிபூரகம்

இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுனாயகமாய் விளங்கும் அனாகதம் உனர்வு மையம் என பார்த்தோம். நம் உடல் அமைப்பு என்பது வலது இடதாக சமச்சீராக அமைந்துள்ளது. வலதில் ஒரு கை,ஒருகால், செவி, கண் இதைப்போன்றே இடதிலும் ஒரு கை,ஒரு கால்,செவி, கண். உடலின் ஒட்டுமொத்த இடது பாகத்தையும் வலது மூளையும், ஒட்டுமொத்த வலதுபாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்துகிறது.
ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய கண்,காது,செவி, வாய்,மூக்கு ஆகியவை நமது கட்டுப்பட்டில் இயங்கும் வண்ணம் புறத்தே அமைந்துள்ளது. இந்த புலன்கள் அனுபவங்களைத் தரக்கூடியவை என்பதால் வெளி உலகை பார்க்கும் வண்ணம் இயற்கை அமைத்துள்ளது. அதே சமயம் நம் உடல் இயங்க தேவையான உறுப்புகள் ஒவ்வொன்றும் உடலின் உட்புறமாய் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் அதை இயக்க முடியாது.தானியங்கிகளாக அவை இயங்குகின்றன.
ஞானிகள் நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதாக கூறுவார்கள். இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் +வாய்+ ஜல + மல துவாரம் என மொத்தம் ஒன்பது. இதில் கழிவு வெளியேற்றத்திற்கு உதவும் கடைசி இரண்டை தவிர்த்து மற்றவை அனைத்துமே உள்நுழைவு வாயில்கள் ஆகும்.கண்களின் வழியாக..காட்சியையும், செவிகளின் வழியாக ஓசைகளையும்,நாசியின் வழியாக நறுமணத்தையும்,உள்வாங்குகிறோம். வாய் வழியாக நாம் உயிர் வாழத்தேவையான உணவினை உட்க்கொள்கிறோம்
உணவானது வாய்வழியே சென்று நமக்கு சக்தியை தருவது குழந்தைகளுக்கும் தெரியும் சாதாரண விடயம். ஆனால்..கண்வழி நாம் பார்க்கும் காட்சிகளும் , செவி வழி கேட்கும் ஒலியும்.நாசிவழி நுகரும் மணமும் நமக்கு சக்தி தருவதை நாம் உணர்வதில்லை.உடலுக்குள் செல்லும் உணவு செய்யும் அத்தனை பணியையும் இந்த புலன்வழி நாம் கொள்ளும் அனுபவங்கள் நமக்குள் செய்கின்றன.
நீங்கள் விரும்பாத காட்சி ஒன்றை தொண்டைக்குழி ஏற்காது- அதனால்தான் " அவர் சொன்னதை என்னால் விழுங்கவே முடியல" என்கிறோம். விழுங்கி தொலைத்த ஒருவர் "என்னால அதை ஏற்க முடியல "என்கிறார். ஒரு விஷயத்தை ஏற்கவேண்டியது அனாகதம் என்கிற இதயத்தின் பணி. ஏற்றுக்கொண்ட ஒருவர் சொல்கிறார்" அதை என்னால் செரிக்க முடியல.."
வாய் வழியாக நாம் உட்கொள்ளும் உணவு நேரடியாக நமக்கு சக்தியாக சேராது.இட்லி,தோசை, பொங்கல், பூரி என வகை வகையாக நாம் உள்ளே தள்ளிய அனைத்தையும் இரைப்பை கார்போஹைரேட்டகவும்.புரதமாகவும்,உப்பாகவும்,சர்க்கரையாகவும்,இதர வைட்டமின்களாக மட்டுமே பார்க்கும். தன்னிடத்தில் வந்த அரைத்த உணவுக் கலவையை சாதக பாதகங்களோடு இனம் பிரிக்கும் வேலையை செய்யும். அதன் பின்னரே செரிமாணப்பணி.
இந்த பணி-உள்ளூர் தபால் நிலையத்தில் போட்ட ஒரு கடிதத்தை ஊர்வாரியாக பிரிப்பார்களே(sortout)அந்த பணிக்கு ஒத்தது.நம் வாழ்வில் நாம் சந்தித்த ஒரு நிகழ்வின் சாதக பாதகத்தை ஆய்ந்து - பிரிக்கும் மகத்தான பணியைத்தான் "மணிபூரக மையம்" செய்கிறது. இந்த மையத்தின் அதிமுக்கிய செயலதிகாரிகளாய் முன் நிற்பவர்கள் நமது சிறுனீரகங்கள் ஆகும்.
ஒவ்வாமையான உணவு வயிற்றில் இறங்கினால் -செரிமானத்தை,கழிவுவெளியேற்றத்தை பாதித்து உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி ஊரு விளைவிக்குமோ அதை போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வாமையான விஷயங்கள் உடலை பாதிக்கும். அதனால்தான் உடல்னலம் கெட்டால் மனனலமும் சேர்ந்தே கெடுகிறது. உடலும் மனமும் ஒன்றி பிணைந்த அம்சங்களாகும். இதமான உணவினால் நம் ஆரோக்கியத்தை பேணுகிற மாதிரி, இதமான உணர்வுகளால் இந்த மையத்தை நாம் அணுக வேண்டும்.
கருத்தியல்களில் நாம் முரண்பட முரண்பட..இந்த மையத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். உணர்வில்லாமல் உள்ளே தள்ளிய உணவை ஓரளவுக்கு பிரிக்க முயன்று, இறுதியில் பிரிக்க முடியாமல் கொழுப்பு கட்டிகளாக உடலில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அப்பிவிடும். நாம் கண்டபடி திணிக்கும் கருத்துக்களுக்கும் இதே கதைதான்.பகவான் புத்தர்தான் இந்த ஆய்வை கண்டறிந்தார். பகுக்க முடியாத நிலையில் ஆசைகளும், கனவுகளும், இந்த மையத்தால் ஓரங்கட்டப்பட்டு உடலில் அதிர்வுகளாக, கண்ணுக்கு புலனாகாத முடிச்சுகளாக இறுகுகின்றன என கண்டறிந்தார்.
கார் வாங்கவேண்டும் என தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவனுக்கு என்ன நிகழும்..? அந்த எண்ணம் நிறைவேறாத நிலையில் உள்ளே அதிர்வாக தங்கும். நாளொருமேனி பொழுதொரு வண்ணம் சாலையில் ஓடும் வண்ண வண்ன கார்களை பார்க்கும்போதெல்லாம் ஏங்கும். காரில் செல்பவர்களைப் பார்த்து பொறாமைப்படும். நாம் வாழவேண்டிய வாழ்க்கயை இன்னொருவர் வாழ்வதாய் பார்க்கும். "நம்மால் வாங்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி வாங்கினான்" என ஆராய்ச்சி செய்யும்.
மூச்சை ஒழுங்குபடுத்தி உடலுக்குள் நிறைவேறாத ஆசைகளாய் குடிகொண்டிருக்கும்- இந்த முடிச்சுகளை அகற்றும் தியான முறைதான் புத்தர் கண்ட 'விபாசனா'தியான முறை.
சிறுநீரகம் கெட்டுப்போனால் டயாலிசீஸ் செய்வதைப்போல- நம் மனம் திரிபு நிலைக்கு வரும்போதெல்லாம் உடனுக்குடனே நம் மனதையும் நாம் டயாலிசீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிபூரக மையம் நம்மை செவ்வனே வைத்திருக்கும்..இல்லையெனில்..அறைகுறையாய் தன் பணியை முடித்து - ஃபைலை அடுத்த மையத்திற்கு தள்ளிவிடும்..அடுத்த மையம் என்ன செய்யும்....?தொடர்வோம்.....

என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!தமிழ்'அழகி'யுடன்வெங்கட்.தாயுமானவன்
என் தமிழோடு கைகுலுக்க(www.kvthaayumaanavan.blogspot.com)

ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை

“ஆன்மீகம்”
ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்றுயோசித்துக்கொண்டிருந்தேன் ,அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்ததுஉண்மையில் எது முக்கியம்.? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனாஎன்கிற வினா,இந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..என் மனதிற்குநியாயம் என்று தோன்றியதை எனக்குத் தெரிந்த வரையில் எழுதி இருக்கிறேன்,
எம்மதமாயிருந்தாலும் சம்மதம் ”மனிதம்” தான் முக்கியம் என்னும் உயரியநோக்கோடு நாம் எல்லோரும் முழு மனதோடு கூடி " மனிதம் " என்னும் ஒரேகொள்கையோடு முயற்ச்சி செய்வோம், நிச்சயமாய்ப் புரிந்து கொள்வோம்,”மனிதம்” தான் ஆன்மீகத்தின் ஆணி வேர் என்னும் உயரிய தத்துவத்தைநாம் புறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால்,புறிந்து கொள்ளப்படவேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், சக மனிதரைப் பற்றியதாகஇருந்தாலும், புறிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையாக செயல்பட்டால்நிச்சயமாகப் புறிந்து கொள்ள முடியும், புறிந்து கொள்ளக் கூடாது என்றுநினைத்துவிட்டால்,புறிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது,நாம் புறிந்து கொள்வோம் வாருங்கள்

நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாககேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம்சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும்நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்னநடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும்முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான்மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான்உறவுக்காரர்கள் என்று
கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில்,திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயேவிஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள்முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான்தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும்ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால்இக்கட்டுரையை எழுதுகிறேன்
கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம்தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளைவைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம்என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராகஇருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்லசக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்டசக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை(அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும்முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறதுநாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்குதுன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டுஉண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பலவிஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமேசெய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துஅவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள்மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பதுஎல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்மனிதம்
அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் மனிதம் வளரும்
அன்புடன்தமிழ்த்தேனீ
ஆன்மீகம் தொடரும்
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4

Full story visit திரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம். ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்

தமிழ் விளையாடல், காளமேகப் புலவரின் இன்னொரு பாடல்.

காளமேகப் புலவரின் இன்னொரு பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதை தத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது
ம்ம்..பாட்டை பார்த்தீர்களா..? வெறும்..த-தா-தி-தூ இதுதான் தெரியுது இல்ல. பாட்டோட பதங்களை கொஞ்சம் வசதியா பிரிச்சு பார்ப்போம் எதாவது புரியுதான்னு.
தத்தி தாது ஊதுதி / தாது ஊதி தத்துதி/துத்தித் துதைதி/ துதைந்து அத்தாது ஊதுதி/தித்த தித்த தித்தித்த தாது எது / தித்தித்தது எத்தாதோ / தித்தித்த தாது / More vist

பெண்ணுலகம் ஏன் மனிதராக பிறந்தோமோ

ஏன் மனிதராக பிறந்தோமோ என நாம் எண்ணிப்பார்த்து கலங்குமாறு அவ்வப்போதுசில நிகழ்வுகள் நடப்பதுண்டு..நம் வாழ்வில். இது எத்தனை பேருக்குபொருந்தும்..பொருந்தவில்லை என்பதுபற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால்..இரண்டுநாட்களாய்...மனிதர் எனும் பொதுமை மீறி..ஏன் ஒரு பெண்ணாக ஏன் பிறந்தோம் எனஎன் மனம் துடித்துக்கொண்டிருக்கிறது.
"மாதராய் பிறப்பதற்கு..மாதவம்..செய்திடல்..வேண்டும்.."- பெண்பிறப்புதவமல்ல..பாவம்..பாவம்..!
ஜன்னலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே..வார்டுக்கு வெளியே -செவிலியர்களின்..ஓட்டமும் நடையுமான சத்தமும்.,சக்கரநாற்காலியைமருத்துவமனை பணியாளர்கள் தள்ளி செல்லும் "கட கட" ஓசையும் துல்லியமாய்கேட்கிறது.தன்னை அழைத்து செல்லவும் இப்படி ஒரு சக்கரநாற்காலி இன்னும்சற்று நேரத்தில் வரக்கூடுமென்பதே எனக்குள் கூடுதல் கலவரத்தைஉண்டுபண்ணீயிருக்கிறது.

For more visit http://www.mallaithamizhachi.blogspot.com/