நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

வாழ்க்கை!

3/12/09

வாழ்க்கை!ஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும்!.
பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்!இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டும் நீள் நெடும் நிழலாய்!பயம் கண்டு ஓடுபவர்க்கோ பின் தொடரும் நிழலாய்!உப்பரிகையில் நின்று காண்பவர்க்கோஅனைத்தும் சிறு பொம்மையாய்!அண்ணாந்து ஏங்கி பார்ப்பவர்க்கோஅனைத்துமே தோன்றும் பிரம்மாண்டமாய்!நடந்து செல்பவர்க்கோ தன்னுடன்நடை பயிலும் நல்ல நட்பாய்!புறக்கண் கொண்டு பார்ப்பவர்க்குபுரியாத புதிராய்த் தென்படும்!அகக்கண் கொண்டு பார்ப்பவரேஅறியக்கூடும் அந்த ரகசியம்!யதோ திருஷ்டி ததோ மனயதோ மன ததோ பாவயதோ பாவ ததோ வாழ்க்கை.பாகம்பிரியாள்.

பிச்சை பாத்திரம்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியில் வல்வினை சூழ்ந்ததா இன்மையை நான் அறியாததா இன்மையை நான் அறியாததா சிறு தொன்மையில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய் புது வினையா பல வினையா கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அதை நின்று மனம் இங்கு பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

நினைவாற்றலின் அறிவியல்

மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர் இடம் உண்டு.இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலானவீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்றஉரையாடல்களை கேட்கமுடியும்.
நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்கதொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லிஅழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.
தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தைநினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காகஅவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்குசகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பைகாலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து திரும்பமாட்டிக்கொள்ள உதவுகிறான்.
கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்குசென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்துதந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.
நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடுசம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசையவேண்டிய அவசியமும் இருக்கிறது.நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்தகருவியும் கிடையாது.செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.
உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.
ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலைநீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரணFM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.
இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சிலவிஷயங்கள்தான்.இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்இல்லை. உணர வேண்டும்.நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.
1.கவனித்தல்.(Listening)ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அதுஅதன் அடுத்த படினிலைக்கு போகிறது.
2.பதிவு(Recording)நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறதுதெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொருவிந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு80%எனில் பதிவு 40%தான்.அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவுசெய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்தண்டனையா எனவும் தெரியவில்லை.
3.இருப்பு வைத்தல்(Retaining)கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாகபொதிந்து வைக்கிறது.பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்புவைப்பது எதற்காக..?
4.திரும்ப கேட்டல்(Recalling)ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,100 சதவீதம் எனில்இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.
நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடைபுலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதேநேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்இயல்பே.இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.
ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காகபடிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.
இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெயர் சொல்லிகை குலுக்குகிறார்.விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.
பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படிஇருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று."நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.
கவனியுங்கள்....கவனியுங்கள்.....கவனியுங்கள்...!
--தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

அடக்குவோம்-அடங்குவோம்

இறைவா..,என்னையொரு பானையாய் வனைந்து பொன் பொருள் என நீ இட்டு நிரப்பியும் போதாமல் இன்னும் உன்னிடம் குறையிரந்துகொண்டே இருக்கிறேன் நான்.
கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டிநாலாறு மாதமாய் குயவனை வேண்டிகொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதைகூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'
இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.அவர் அடங்க தவறிட்டாராம்.
அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமைஆரிருள் உய்த்துவிடும்.
அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.
தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனையமன்னுயிர் எல்லாம் தொழும்.
தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும்.
இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.
நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.
கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நான்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"
அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை

தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.
நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.
சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
பயணபாதை விவரம்.1.சகஸ்ராரம்2.ஆக்ஞா3.விசுக்தி4.அனாகதம்5.மணிபூரகம்6.சுவாதிஷ்டானம்7.மூலாதாரம்.
யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.
இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.
1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.
மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?
அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.
இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்
இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல""என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல" "என்னால செரிக்க முடியல"
நான் நானா இல்லன்னா -பைத்தியம்நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்விழுங்க முடியலன்னா- வாந்தி.ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.
பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.
தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/