நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

அம்மாவின் புடவை

3/12/09

Join http://groups.google.com/group/illam?hl=en அம்மாவின் புடவை என்றவுடன் என்னுடய நினைவுகள் நான் பள்ளியில் படித்த நாட்களை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அந்த நாட்களை நினைத்தால் அதுவும் வெய்யில் கால விடுமுறையை பாட்டி வீட்டிலோ இல்லை பெரியம்மாவின் வீட்டிலோ கழித்த நாட்கள் இன்றும் மனத்தில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சித்தியின் குழ்ந்தைகள், மாமாவின் குழந்தைகள் என்று ஆணும் பெண்ணுமாய் ஒரு பட்டாளமே கிராமத்தின் பெரிய வீட்டில் படையெடுக்கும். தாத்தா பாட்டிககோ பேரக்குழ்ந்தைகளை ஒருமித்து பார்க்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையே கிடயாது.
அந்தக்காலத்திலோ டீவீ கிடையாது. ரேடியோ ஒரு சில வீடுகளில் மட்டும் இருக்கும். காலயில் எழுந்து காபி குடித்தவுடன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் பாண்டியோ இல்லை ஒரு டென்னிஸ் பாளை வைதுக்கொண்டு விளையாடவேண்டியது. 9 மணிக்கு பாட்டியின் அழைப்பு. பூஜை முடித்த கையுடன், ஒரு பெரிய பாத்திரத்தில், பழய சாதத்தில் ஆடையுடன் கூடிய கட்டி தயிரை விட்டு உப்பு போட்டு நன்றாக பிசைந்து, மிஞ்சின குழம்பை கரியடுப்பில் சூடு பண்ணி, எல்லா பேரன் பேத்திகளையும் வட்டமாக அமர்த்தி, ஓரொருத்தர் கையில் அந்த தயிர் சாதத்தை பாசத்துடன் தரும் பொழுது எத்தனை பிடி சாப்பிட்டோம் என்ற கணக்கே தெரியாது. திரும்பவும் மைதானத்தில் சென்று விளையாடுவது வெய்யிலின் சூடு என்ன என்று நினைக்கவே தெரியாது. மதியம் உணவிற்குப்பிறகு ஒரு குட்டி த்தூக்கம் அதுவும் தாத்தாவின் பாசத்துடன் கூடிய கண்டிப்பிற்காக. பெண் குழந்தைகளோ பாட்டியுடன் ஆடு புலி விளையாட்டு இல்லையென்றால் பாம்புக்கட்டம். மாலயில் பாட்டியுடன் பக்கத்திலுள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள பெரிய வெளிப்பராகாரத்தில் சுற்றி வந்து திரும்பவும் பாட்டி கைய்யால் சாதம் சாப்பிட்டுவிட்டு தாத்தாவின் கதையை அல்லது பாட்டி தன்னுடய மக்ன்களும் மகள்களும் சின்ன வயதில் எப்படியெல்லாம் வளர்ந்தார்கள் என்ற பழய நிகழ்ச்சிகளை கேட்பது. வீட்டில் இருப்பதோ இரண்டோ இல்லை மூன்றோ தலயணை. ஒன்றிரண்டு ஜமக்காளத்துடன், பாட்டியின் புடவைகளையும் சேர்த்து படுக்கை தயாரித்து எனக்கு உனக்கு என்று அன்புடன் சண்டை பிடித்து, எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் கழித்த அந்த மகிழ்ச்சியான நாட்கள். பேரன் பேத்திகளுக்காக தாத்தாவின் வயலில் வேலை பார்க்கும் பாட்டக்காரனிடம் பனை நுங்கு, கொல்லாம்பழம், மாம்பழம் போன்ற பழங்களை கொண்டுவரும்படி ஆசையுடனும் அதிகாரத்துடனும் சொல்வது. விடுமுறை முடிந்து திரும்பவும் அவ்ரவர்கள் ஊருக்கு செல்லும்பொழுது, தாத்தா பாட்டியின் கண்ணீருடன் கட்டியணைத்து முத்தமிட்டு அவர்களை நமஸ்காரம் செய்தது இன்னமும் நினைத்தால் கண்ணிர் பெருகி வடிகிறது. அந்த மகிழ்ச்சியான நாட்கள் இன்றய இளைய தலைமுறைக்கு கிடைப்பதில்லை. அன்று அப்படி விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்ததால் தான் - அண்ணா/தம்பி/அக்கா/தங்கை/அத்தான்/அம்மாஞ்சி/அத்தங்கார் என்ற உறவுகள் இன்றும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
இன்றய இளைய தலைமுறை வளர்ந்த விதம், சூழ்னிலை, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு செல்லும் கட்டாயம் குடும்பத்திற்கு ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று ஒரு மகனோ இல்லை மகளோ பொத்தி பொத்தி வளர்கிறார்கள். வெளியூரில் தாத்தா பாட்டி இருந்தாலும், மகனையோ அல்லது மகளையோ விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பும் பக்குவம் இன்றுள்ளபெற்றோருக்கு இருப்பதில்லை. பிள்ளைகளோ அதற்கும் ஒரு படி மேல். "இல்லைம்மா தாத்தா வீட்டிலே போரடிக்கும். ஒரு கம்ப்யூடர்/கேம்ஸ் கூட கிடையாது. என்னை ஸம்மர் கேம்ப்புக்கு அனுப்பும்மா என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க" என்று சொன்னவுடன் அதற்கு மறு வார்த்தை பெற்றோரால் சொல்லமுடிவதில்லை.
ஏன் இப்படி பழசை நினத்து புலம்புகிறார் இந்த மனிசன் என்று சில சமயங்களில் நினைக்கத்தோன்றும். அம்மாவின் புடவை என்ற வார்த்தையை படித்தவுடன் மனதில் உள்ள ஆதங்கம் இந்த கட்டுரை வடிவில் வெளிவந்தது. இல்லம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி
நீலகண்டன்

0 Comments: