நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை - பின்னதிர்வு பகிரல்-1

3/12/09

கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான் தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில் கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்குஉந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான். இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது. மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து என்று சொல்லலாமா???
அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும் கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான் கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில் கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
அன்புடன்
சுவாதி.
உலகியல் ரீதியில் எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்தை நிறுவ சாத்தியமே இல்லை.காரணம் நாம் வாழும் வாழ்கை என்பது சார்பியலை சார்ந்தது என்ற உண்மையை நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம். அமெரிக்காவில் நீங்கள் இந்த மடலை அடித்தபோது அங்கு சூரியன் இருந்திருக்ககூடும். அதே நேரம் இங்கு காலனேரத்தின் நிலை வேறு.
ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றிபோட்டாலே பொருள் மட்டுமல்ல..யாவுமே மாறிபோகும். உதாரணத்திற்கு- what is the time..? என்ற கேள்விக்கும் what the time is..? என்ற கேள்விக்கும் உள்ள முரணை பார்த்தால் விளங்கும்.
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சர்ர்பு நிலையாகும். நம்பாமல்போனதற்கு நீங்கள் 100 காரணம் சொன்னால். நம்புவதற்கு ஒருவர் 1000 காரணங்களை சொல்லக்கூடும்.
இறையை -உருவமாக, கொள்கையாக பாராமல், ஒரு தன்மையாகவும்,இயற்கை ஒழுக்கமாகவும் பார்க்க புரிந்துகொண்டால் பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். துன்பம் நேரும்போது காப்பாற்றவேண்டிய பொறுப்பெல்லாம் கடவுள் தன்மைக்கு கிடையாது.
ஒரு குண்டூசி தேவை என்றால் வானத்தை பார்த்து கர்த்தரிடமோ, ஈசனிடமோ, அல்லாவிடமோ "குண்டூசியை தாருங்கள் என கேட்பதில் " ஞாயமே இல்லை. உருவான காலத்திலிருந்து நிலத்தடியில் தங்கிய இரும்புதாது பற்றிய அறிவு நம்மிடம் உண்டு. பிரித்தெடுத்து உருக்கி, ஊச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்- இயற்கை ஒழுக்கம் நமக்கு அறிவை மட்டும்தான் தரும். அதைவைத்து நாம் பெறநினைப்பதை அடைந்துகொள்ள வேண்டியதுதான்.நம் நாட்டில் இரும்பு தாது தீர்ந்துபோனால் அயல்னாட்டிலிருந்து தருவிக்க வேண்டியதுதான். அங்கும் தீர்ந்துவிட்டதா..இரும்புக்கான மாற்றுபொருளை யோசிக்க வேண்டியதுதான். மாற்றுப்பொருளும் உருவாக்க முடியவில்லையா..?இந்த உலக இயக்கம் நின்றுவிடாது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. பிள்ளையார் சிலை பால் குடித்ததென்று , அந்த சிலையை உடைத்த ஒரு தீவிரவாதிதான் இன்று இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆன்மீகம் என்பது பாட்டு பாடுதல் மத சின்னங்களை அணிதல், என்ற விதிக்கப்பட்ட கட்டுக்குள் நின்று போனது பரிதாபம்.
நேற்று உங்களின் profile பார்த்தேன். புற்றுநோய் உள்ளவர்க்கு உதவுதலை நோக்க்மாக சொல்லி இருந்தீர்கள். உங்களால் உதவி பெற்ற ஒருவர், பூரண குணம் பெற்று "நீங்கள்தான் என் கடவுள் "என்று சொன்னால் என்ன செய்வீர்கள்..? என்ன சொல்வீர்கள்..? நாம் இப்படித்தான் பழக்கப்பட்டுவிட்டோம். செய்தால் சாமி உண்டு- செய்யலையா சாமி இல்ல - இரண்டு கருத்தியலுமே தவறு.
அப்புறம் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்கொண்டு வந்தபோது -உங்கள் வார்த்தை ஒன்று கண்ணில் பட்டது- "நாம் பதியனிட்ட ரோஜா..நம் கண் முன்னாலேயே மலருதலை பார்த்தல்..அதை ரசித்தல் "என ஒரு அழகியலோடு சொல்லப்பட்ட அதை உள்ளே சென்று படிக்ககூட தோணவில்லை.நாம் பார்க்க அந்த செடி எத்தனை மலர்களை மலர்த்தி மகிழ்ச்சிப்படுத்துகூடும்..? சீசன் மாறினால் மலர்தல் நின்றுவிடாதா..? இதுதான் இயற்கையின் ஒழுக்கம். இங்கொரு பூ மலர்வதை நிறுத்தினால்தான்,வேறொரு இடத்தில் வேறொரு பூவை மலர்த்த முடியும்.
இந்தியாவில் வெயில்- US ல் நிலா. USல் வெயில் இந்தியாவில் நிலா
வகுப்புக்கு வந்த வாத்தியார் கேட்டார்.."டேய் பசங்களா..பூமி நம்ம சூரியனை எப்படிடா..சுத்துது..?" பையன் ஒருத்தன் சொன்னான் , "ஒழுங்கற்ற பாதையில் சுத்தி வருது சார்.." அப்படின்னு. "வெரி குட். ஒக்காருடா" அப்படின்னாரு வாத்தியார். நம்ம பள்ளிகூட பாடதிட்டம் இதைத்தான் சொல்லுது. பையன் இதை எழுதினா மதிப்பெண் நிச்சயம் உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா..? "பூமி சூரியனை ஒழுங்கற்ற பாதையில்..ஒழுங்காக சுற்றி வருகிறது.." ஆம் சுத்தி வர்றதென்னவோ ஒழுங்கில்லா பாதைதான்..,ஆனா சுத்துகிற முறையில் ஒழுக்கம் இருக்கு. அதனாலதான் உலக இயக்கம் நடந்துகிட்டு இருக்கு.
ஒழுங்குமுறைகளை ஞாயப்படுத்தி நம்மை அத்துமீற பணிக்கும் வாழ்வியல் சூழலில், அதை மீறாமல் , ஒழுங்கற்ற உலகத்தில் நாம் ஒழுங்காய் வாழ கடவுள் கொள்கையோ, இயற்கைனிலை ஒழுக்கமோ ஏதோ ஒரு பெயரில் நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
"நன்றாங்கால் நல்லவா காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி. நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..? அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம் எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக தேட்டங்கள்தான். . தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்www.kvthaayumaanavan.blogspot.com

0 Comments: