நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

அகமும் புறமும்

3/12/09

அகமும் புறமும்
புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒருதிவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளிஇன்பத்தைத் தேடவே மாட்டான். தன்னைத் தானே அனுபவித்துக்கொண்டு ஆனந்தசமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையை விட்டுவராமல் இருந்தாலும், அதனிடம் நதிகள்போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வ‌ந்து விழுந்துசமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். " அபூர்வ மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்திரம் "எ‌ன்று கீதை சொன்ன மாதிரி பேரின்பக் கடலாகநிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல்பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திரபதவியின் ஆனந்தம் கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார்ஸ்ரீ பகவத் பாதர்கள் : 'யத்சௌக்யாம்புதிலேச லேசத இமே சக்ராதயோ நிர்விருதா:' [மனீஷா பஞசகம்.]
பதவி, பணம், ஸ்தீரி, புருஷாள், கௌரவம், விளம்பரம் [பப்ளிஸிடி] -என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாகஎண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும், சமுத்திரமாக இருக்கிறநா‌ம் அதை அறியாமல் ஒரு சொட்டுஜலத்திற்காகத் தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காதலால்நமக்குக் குறை வந்துவிட்டதாகத்துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரணவஸ்து. நமக்கு அந்நியமாக வெளி என்றேஒ‌ன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நம்முள்ளேயே அடக்கம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடிஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசங்கராச்சார்ய ஸ்வாமிகள்
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

0 Comments: